திமுக பின்புலத்துடன் இயங்கும் பொம்மிடி ஜானகி பட்டாசு கடை , உள்ளே 8000 கிலோ வெடி பொருளா.! 8 அடி உயரத்தில் இருக்கும் சுற்றுச்சுவர்.! என்ன நடக்கிறது.. கைவரிசை காட்டும் அதிகாரிகள்..! என்ன செய்கிறது த வெ க..?

Nov 23, 2026 - 18:39
Nov 23, 2026 - 18:39
 0  9
திமுக பின்புலத்துடன் இயங்கும் பொம்மிடி ஜானகி பட்டாசு கடை , உள்ளே 8000 கிலோ வெடி பொருளா.! 8 அடி உயரத்தில் இருக்கும் சுற்றுச்சுவர்.! என்ன நடக்கிறது.. கைவரிசை காட்டும் அதிகாரிகள்..! என்ன செய்கிறது த வெ க..?

திமுக பின்புலத்துடன் இயங்கும் பொம்மிடி ஜானகி பட்டாசு கடை , உள்ளே 8000 கிலோ வெடி.! 8 அடி உயரத்தில் இருக்கும் சுற்றுச்சுவர்.! என்ன நடக்கிறது.. கைவரிசை காட்டும் அதிகாரிகள்..! என்ன செய்கிறது த வெ க..?

தருமபுரி மாவட்டத்தில் பொம்மிடி அருகே மலைக்குன்று பக்கத்தில் `இயங்கி வரும் ஜானகி பட்டாசு கடை இயங்கி வருகிறது. ஜானகி பட்டாசு கடையால் இந்த பகுதிக்கு ஒரு பெருமை உண்டு ஒரு வளர்ச்சி உண்டு சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் இதனால் பயனடைந்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால் ஆபத்தான பட்டாசு கடை என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக இந்த பட்டாசு கடை அரசு விதிகளின் அடிப்படையில் இல்லையென்றும் மேலும் திமுக ஆதரவில் பட்டாசு கடை உரிமையாளர் வசந்த் இருப்பதால் இவரின் கடைகளுக்கு அபராதம் விதிக்காமல் அதிகாரிகள் விசேஷ நாட்களில் சமரசம் செய்து தட்டுவரிசை விழாவே நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஜானகி பட்டாசு கடைக்கு அருகில் சுமார் 150 மீட்டர் தொலைவில் 8 அடிக்கு சுற்றுச்சுவர் உள்ளதாகவும் அங்கே சில நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பதாக அப்பகுதி மக்கள் கூறிய நிலையில் தீவிர விசாரணையில் அப்படி இல்லை என்றும் ஒரு தகவல் கிடைத்தது. இருப்பினும் இங்கே ஏதாவது சிறு விபத்து நடந்தாலும் ஜானகி பட்டாசு கடையின் அருகில் இருக்கும் வீடுகள் பெரிதளவில் சேதமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு அக்டொபேர் 8 ஆம் தேதி ஓசூர் பட்டாசு குடோனில் திடீரென விபத்து ஏற்பட்டு அரூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 6 பேர் வெடி விபத்தில் உயிரிழந்தது அவ்வபோது நினைவுக்கு வருவதை யாராலும் மாற்ற முடியாது அதற்கு நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் பொம்மிடி மக்களுடைய நிலைப்பாடு. மேலும் 3 வருடத்திற்கு ஒரு புதுப்பிக்கும் போது அதிகாரிகளுக்கு லட்ச கணக்கில் பணம் கைமாறுவதாக கூறப்படுகிறது, அதுமட்டுமின்றி இவர்களுடைய ஜானகி பட்டாசு கடை தருமபுரி உட்பட 3 இடத்தில் அனுமதி வாங்கி கொண்டு ஒட்டு மொத்த பட்டாசு பெட்டிகளையும் பொம்மிடி ஜானகி பட்டாசு குடோனில் அதாவது 8 அடி உயரம் கொண்ட சுற்றுவர் குடோனில் வைப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பட்டாசு குடோனுக்கு 5000 கிலோ வரைதான் பட்டாசு வைப்பதற்கு அனுமதி இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அதற்கு மீறி 8000 கிலோவுக்கு மேல் பட்டாசு வெடி பொருட்கள் பதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . மேலும் இந்த கடையின் கட்டுப்பாட்டில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒரு அடியாட்கள் அங்கமாகவே உள்ளதாக தகவல். அதுமட்டுமின்றி விழாக்காலங்களில், மக்களுக்கு நன்மையை செய்வதுபோல தங்களுடைய நன்கொடை மனதை வெளிப்படுத்தி வருவது வழக்கமாகவும், தீபாவளி காலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துடைய அரசியல் நபர்களையும், இளைஞர்களையும் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு மக்கள் மத்தியில் ஒரு பயத்தை காட்டும் தோரணையில் செயல்படுவதாக கூறுகின்றனர் சுற்று வட்டார மக்கள். மலை பகுதி ஓரத்தில் உள்ளதால் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் இது போன்ற சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர். மேலும் தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக இருக்கும் வெங்கட்ராமன் அவர்கள் பட்டாசுுுு குடன்களுக்கு அனுமதி கொடுக்கு அதிகாரிகளை பற்றி ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளது.   இதற்கு முன்பிருந்த அரசு எது நடந்தாலும் பரவாயில்லை என்று இருந்ததால் ஆட்சி கவிழ்ந்து போனது மக்களுக்கு பேராபத்தாக இருக்கும் நிலையில் இயங்கும் இந்த பட்டாசு கடைக்கு உங்கள் விசாரணை என்ன என்பதை பார்ப்போம். அதிகாரிகள் மவுனமாக இருக்கும் வரை விமர்சனம்..! விசாரணை செய்தால் நிதர்சனம்..!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai Editor @ Publisher : Msp Manibharath