பிரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித சிறுமலர் தெரேசாவின் திருப்பண்டப் பெட்டகம் கும்பகோணத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவ மக்கள் சிறப்பு ஜெப வழிபாடு

Oct 5, 2026 - 20:45
 0  9
பிரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித சிறுமலர் தெரேசாவின் திருப்பண்டப் பெட்டகம் கும்பகோணத்தில்  மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவ மக்கள் சிறப்பு ஜெப வழிபாடு

பிரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித சிறுமலர் தெரேசாவின் திருப்பண்டப் பெட்டகம் கும்பகோணத்தில்

மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவ மக்கள் சிறப்பு ஜெப வழிபாடு

கும்பகோணம், அக். 5 -

பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட புனித லிசியூ தெரேசாவின் திருப்பண்டம் அடங்கிய பெட்டகம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நான்கு நாள்கள் வைக்கப்பட்டுள்ளதையொட்டி, கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்து, சிறப்பு ஜெபம் மற்றும் வழிபாட்டில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

புனித சிறுமலர் என்று அழைக்கக்கூடிய லிசியூ தெரேசா, 1873-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் அலன்சோன் நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மேரி-ஃபிரான்சுவாஸ் தெரேஸ் மார்ட்டின். சிறு வயது முதலே இறைநம்பிக்கையில் நாட்டம் கொண்ட இவர், தனது 15-ஆவது வயதில் லிசியூவில் உள்ள கார்மலைட் துறவற மடத்தில் சேர்ந்தார். சில காலங்கள் துறவற வாழ்க்கையை மேற்கொண்ட அவர், பெரிய காரியங்களைச் செய்வதைவிட அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் சிறிய செயல்களையும் முழுமையான அன்புடன் செய்வதே இறைவனுக்கு உகந்தது என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தினார். இது பின்னாளில் அவரது ஆன்மிகக் கொள்கையான ‘சிறிய வழி’ என அழைக்கப்பட்டது. அதன் பிறகு

காசநோயால் பாதிக்கப்பட்ட புனித தெரேசா, 1897-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி தனது 24-ஆவது வயதில் உயிரிழந்தார். அவரது ஆன்மிக அனுபவங்கள் பின்னர் ‘ஒரு ஆன்மாவின் கதை’ என்ற ஆங்கில புத்தக நூலாக வெளியிடப்பட்டன. 1925-ஆம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்ட அவர், 1997-ஆம் ஆண்டு திருச்சபையின் மறைவல்லுநராகவும் போற்றப்பட்டு வருகிறார்.

கும்பகோணத்தில் சிறு மலருக்கு சிறப்பு வழிபாடு

புனித சிறுமலர் தெரேசாவின் திருப்பண்டம் அடங்கிய பெட்டகம், கிறிஸ்தவ மக்களின் ஜெபம் மற்றும் வழிபாட்டுக்காக 70 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட திருப்பண்டப் பெட்டகம், தமிழகத்தின் பல்வேறு மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

அதன்படி, கும்பகோணம் ரயிலடி சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நான்கு நாள்கள் வைக்கப்பட்டுள்ள திருப்பண்டப் பெட்டகத்தை கிறிஸ்தவ மக்கள் நேரில் கண்டு பாவ மன்னிப்பு பெற்று ஜெபித்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வையொட்டி நடைபெற்ற சிறப்பு ஜெபம் மற்றும் வழிபாட்டுக்கு மறைமாவட்ட முதன்மைக் குரு பிலோமின் தாஸ் தலைமை வகித்தார். மறைமாவட்ட பொருளாளர் அந்தோணி ஜோசப், டி. தேவதாஸ், பெரியமலர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலை 6 மணியளவில், பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில் திருப்பண்டப் பெட்டகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பக்தியுடன் சுமந்தபடி அமைதி ஊர்வலமாக பேராலய வளாகத்தைச் சுற்றி வலம் வந்தனர். அப்போது கிறிஸ்தவ மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஜெபப் பாடல்களைப் பாடி வழிபட்டனர்.

கும்பகோணத்தில் வழிபாடு நிறைவடைந்த பின்னர், திருப்பண்டப் பெட்டகம் தமிழகத்தின் பிற மறைமாவட்டங்களில் உள்ள திருச்சபைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறப்பு ஜெபம் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளதாகவும் அதன் பிறகு தமிழகப் பயணம் நிறைவடைந்த பின்னர் திருப்பண்டப் பெட்டகம் மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்தனர். சிறிய செயல்களையும் மிகுந்த அன்புடன் செய்யுங்கள் என்ற புனித சிறுமலர் தெரேசாவின் போதனை, மற்றும் வாழ்க்கை வரலாறு அவரது ஆன்மிக வாழ்வின் முக்கிய செய்தியாக இன்றளவும் கிறிஸ்தவ மக்களால் நினைவுகூரப்படுகிறது.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai