புதுப்பட்டி அருகே குடித்து விட்டு ஹெல்மெட் இல்லாமல் சுத்தும் குடிகார வாகன ஓட்டிகள் சைலண்டாக இருக்கும் அ பள்ளிப்பட்டி காவல்துறை.. என்னவா இருக்கும்..? புதுப்பட்டி மக்களை கேவலப்படுத்தும் தனியார் பார் உரிமையாளர்

Apr 24, 2026 - 19:26
Apr 24, 2026 - 22:28
 0  22
புதுப்பட்டி அருகே குடித்து விட்டு ஹெல்மெட் இல்லாமல் சுத்தும் குடிகார வாகன ஓட்டிகள் சைலண்டாக இருக்கும் அ பள்ளிப்பட்டி காவல்துறை.. என்னவா இருக்கும்..?   புதுப்பட்டி மக்களை கேவலப்படுத்தும் தனியார் பார் உரிமையாளர்

புதுப்பட்டி அருகே குடித்து விட்டு ஹெல்மெட் இல்லாமல் சுத்தும் குடிகார வாகன ஓட்டிகள் சைலண்டாக இருக்கும் அ பள்ளிப்பட்டி காவல்துறை.. என்னவா இருக்கும்..?  

புதுப்பட்டிபுதுப்பட்டி மக்களை கேவலப்படுத்தும் தனியார் பார் உரிமையாளர்  சந்துக்கடைக்கு இவரே சரக்கு சப்ள பண்ணுவாராம் பழியை தூக்கி புதுப்பட்டி மக்கள் மீது போடுவாராம்..! 

தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சேலம் செல்லும் வழியில் புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே கடந்த 2 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பிலேயேர்ஸ் கிளப் திருப்பூர் மதுபானக்கடை தற்போது உள்ளூர் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கி வருகிறது, குறிப்பாக பல்வேறு இடங்களில் சந்துக்கடைகள் தவறான முறையில் மதுபழக்கத்தை பயன்படுத்தும் மது போதை பிரியர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்ட நிலையில் சமூகத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என அறிவியல் பூர்வமான சில கருத்துக்கள் உருவானதால் 5 அல்லது 7 கிலோ மீட்டர் தொலைவில் மதுபான கடையை திறந்ததாக ஒரு பக்கம் விமர்சனம் எழுந்தியுள்ளது. கல்வியிலும், தொழில் துறையிலும் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே தனியார் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதனால் இங்கே இருக்கும் சமூகத்திற்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் என்ன வளர்ச்சி உருவாகியுள்ளது.  இதற்கு முன்பு கிராமங்களில் சந்துக்கடை வைத்துள்ளதாக சில நபர்களை காவல்துறை கைது செய்தது ஆனால் தனியார் பார் விதிமுறைகளுக்கு மீறி சந்துக்கடை வியாபாரிகளுக்கு மதுபாட்டில்களை வாரி வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட கடைகளுக்கு எந்த அடிப்படியில் அனுமதி கிடைத்திருக்கும்.  அடிக்கடி இந்த மதுபான கூடத்தில் சண்டைகள் உருவாகி வருகிறது  எதிர்காலத்தில் இங்கே சாதி சண்டைகள் கூட உருவாகலாம், சரியான பாதுகாப்பும் இல்லை இதனால் எங்களுக்கு பெரும் அச்சம் இருப்பதாக புதுப்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி பார் உரிமையாளர் கூறுகையில் இங்கே எந்த பிரச்சனையும் இல்லை, மேலும்  புதுப்பட்டி ஊர்ல இருக்கறவங்க சந்துக்கடை நடத்துகிறார்கள் அதை யார் கேட்பது என தான் செய்யும் தவற மறைப்பதற்காக ஒரு கிராமத்தின் மீது பழியை போட்டு சம்பாதிக்கும் இவர் உண்மையாவே சரியான மாஸ்த்தான் போல என்ற நினைக்க வைத்தது பார் உரிமையாளரின் பதில். இரண்டு கிலோ மீட்டர் அருகில் அ பள்ளிப்பட்டி காவல்துறையினர் இருந்தாலும் அல்லது அதே காவல்துறை சுங்கச்சவடி அருகே சோதனையில் ஈடுபட்டாலும் தனியார் பாரில் இருந்து குடித்துவிட்டு வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் இல்லாமல் கெத்தாக வருவதுதான் இங்கே மாஸான சம்பவமா இருக்கு..வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்க காவல் துறை தீவிர கண்காணிப்பில் இருப்பாங்க ஆனா இப்பவெல்லாம் சைலண்டாக இருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கு என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்..?

  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai