தவெக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு: கும்பகோணத்தில் பரபரப்பு
தவெக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு: கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணம், அக். 17
கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகியை, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் ஒன்றிய தவெக இணைச் செயலராக இருப்பவர் ஸ்ரீதேவி 46 அண்ணலக்ரஹாரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மனைவியான இவர், சனிக்கிழமை இரவு கும்பகோணத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது
மாத்தி கேட் அருகே கீழநாகத்தோப்பு பகுதியில் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஸ்ரீதேவியை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடியதாக தெரிய வருகிறது, இதில், அவரது கையில் இரு இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன,இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் ஸ்ரீதேவியை மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய இருவரையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கும்பகோணத்தில் உள்ள பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் நிர்வாகத் தேர்தல் தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம்,MP நிர்வாக இயக்குநர் வேலப்பன் உள்ளிட்ட முக்கிய (கே.எம்.பி.எஃப்) நிர்வாகிகள் மீது ஸ்ரீதேவி காவல்துறையில் புகார் அளித்திருந்ததார்,
இந்தப் புகாரின் அடிப்படையில் கும்பகோணம் போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர், இந்தச் சூழலில், தற்போது ஸ்ரீதேவி மீதான இந்த தாக்குதலுக்கும், பரஸ்பர சகாய நிதி நிறுவனத் தேர்தல் விவகாரத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் அ. மகேஷ்
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0