சாதி சங்கத்தில் இருக்கும் கெளதம் மற்றும் முருகவேலுக்கு பொறுப்பு..! தருமபுரி திமுக நிர்வாகிகளுக்கு ஆப்பு..! இதுதான் சமூக நீதி கட்சி..? தருமபுரியில் நாறிப்போன திமுக..! குஷியில் பாமக..!
சாதி சங்கத்தில் இருக்கும் கெளதம் மற்றும் முருகவேலுக்கு பொறுப்பு..! தருமபுரி திமுக நிர்வாகிகளுக்கு ஆப்பு..! இதுதான் சமூக நீதி கட்சி..? தருமபுரியில் நாறிப்போன திமுக..! குஷியில் பாமக..!
இந்தியாவில் சமூக நீதி கட்சி, சமத்துவ கட்சி என்று மார்தட்டி கொள்ளும் கழகம் திமுக..! என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனா அந்த அளவிற்கு
ஒருவேளை சாப்பாடு இல்லாமல் வெறும் டீ தண்ணீரை குடித்து
சாதி, இனம் பார்ப்பவனை அருகில் சேர்க்காமல் சமூக நீதி கருத்துக்களை பதிவு செய்து இனவேறுபாடு பார்ப்பவனையும், சமூக நீதி போராளியாக மாற்றியது மிகப்பெரிய வரலாறு, இப்படி
மக்களிடத்தில் திராவிட கொள்கைகளை பரப்பி பெரிதளவில் மக்களிடத்தில் இடம் பிடித்தனர், காரணம் பெரியார் ரசிகர்கள், அண்ணா தொண்டர்கள். திமுக நிர்வாகிகள் என்று அளவில்லாமல் எடுத்துரைக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் மும்மரமாக முன்னணியாக திமுக வென்றுள்ளது தனது சமூக நீதி கொள்கை பிடியில்..
ஆனால் முதல்வர் முக ஸ்டாலின் எப்போது தலைமையேற்றாரோ அப்போதிருந்து சாதியவாதிகளுக்கு முன்னுரிமை அழைக்கப்படுவதாக தருமபுரியில் திமுக நிர்வாகிகளே பெரும் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்களாம், குறிப்பாக முன்னாள் தருமபுரி திமுக சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணியின் லெப்ட் ரைட் கையாக இருந்த மாவட்ட ஐடி விங் அமைப்பாளர் கௌதம் தருமபுரியில் மைனாரிட்டி சமூகத்தில் இருந்தாலும் அவரின் செயல் திறனை கண்டு பொறுப்புகள் வழங்கியது அப்போது பெருந்தன்மையாகவும் மறுபுறம் அங்கே உள்ள வன்னியர் சமூக திமுக இளைஞர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..!
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆ மணி அவர்கள் மக்களுக்கு எல்லாத்தையும் செய்து கொடுப்பேன் என்றும், கார் இருந்தாலும் அதில் வரமுடியாத நிலைபோல அரூர் மக்கள் கூப்பிட்ட நேரத்திற்கு ஓடோடி வருவேன் என்று நம்ப முடியாத கருத்துகளை கூறி மக்களை மேலும் ஏமாற்றி வருகிறாராம் எம் பி ஆ மணி.
இது திமுகவிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது என்பதை தெரியாமல் இருக்கிறது தலைமை என்று தலையில் அடித்து கொள்கின்றனர் தருமபுரி மூத்த முன்னோடிகள். இப்படி ஒரு விமர்சனத்தில் இருக்கும் எம் பி ஆ மணிக்குத்தான் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்து வெற்றி கனவில் இருந்த அரூர் தொகுதியை மணியிடம் கொடுத்து அழிவின் உச்சத்தை தொட்டுள்ளது திமுக தலைமை. இப்படி விமர்சனத்துக்குள்ள எம் பி இடம் மீண்டும் நம்பிக்கை நாயகனாக இருந்து கௌதம் பயணம் செய்து வருகிறார். மேலும் பொறுப்பு அமைச்சராக இருக்கும் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திற்க்கும், அமைச்சருடைய உதவியாளர் தேவானந்திற்கும் செல்ல பிள்ளையாக கெளதம் இருப்பதால் எம் பி மணியை கண்காணிக்கவும் தருமபுரி மண்ணில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவும் வசூல் பெறுவதிலும் இருக்கட்டும் என்பதற்காக தருமபுரி திமுக மேற்கு நகர செயலாளர் பொறுப்பை கெளதமிற்கு வழங்கியதால் தருமபுரி திமுக வன்னியர் கோட்டை அதிர்ச்சியடைந்து காற்றில் பறக்கும் சுண்ணாம்பு பவுடரை போல பாமக கட்சிக்கு வெள்ளையடிக்க சென்று விட்டார்களாம் திமுக வன்னியர் கோட்ட நிர்வாகிகள்.! ஏன் என்றால் தற்போது தருமபுரி திமுக மேற்கு நகர செயலாளராக இருக்கும் கெளதம் தனது சாதியான செங்குந்தர் சங்கத்தில் மாநிலத்தில் பொறுப்பு பெற்றுள்ளார்.
அந்த சாதி சங்கத்தில் பொறுப்பேற்ற சம்பவம் சமூகவலைதளங்களில் பரவிய பின்னர் பெரும் விமர்சனத்திற்குள்ளாகின. பிறகு சோசியல் மீடியாவில் இருந்து பெறப்பட்ட பொறுப்ப்பிறகான புகைப்படத்தையும் வாழ்த்துக்கள் செய்தியையும் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு சாதி சங்கத்தில் பொறுப்பு இருக்கும் போது” திமுக எதற்கு பொறுப்பு வழங்கியது என்று தருமபுரியில் திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சியான விசிகவிடமும் பெரும் புரட்சி வெடித்துள்ளது. இதனால் தருமபுரி பாமக குஷி மூடில் உள்ளதாம்.
இதுகுறித்து மதுரை எவிடென்ஸ் அமைப்பிடம் தகவல் வந்த அடிப்படியில் நமது நிறுவனத்திற்கு இதுபற்றி கெளதமிடம் கேட்கும் போது பிரதர் எனக்கே தெரியாம போட்டுட்டாங்க போட்ட அடுத்த நாளே நான் பொறுப்பில் இருந்து ரிசைன் பண்ணிட்டேன் வேணும்னா ரிசைன் லெட்டர் அனுப்புறேன் என்றார், ஆனாலும் அந்த ரிசைன் லெட்டர் அவர் அனுப்பவில்லை, இதுமட்டுமினின்றி கெளதம் ஒருவரிடம் லெப்ட் ரைட்டாக இருந்தாலும் கெளதமிற்கு லெப்ட் ரைட்டாக தனது சொந்த சமூகமான முருகவேல் இருப்பதால் அவருக்கு தான் முன்னாள் இருந்த நகர ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில் நுட்ப அணி பிரிவை பொறுப்பை வாங்கி கொடுத்துள்ளார். முருகவேல் என்பவர் செங்குந்தர் சாதி சங்கத்தில் மாநில பொறுப்பில் உள்ளார்.
அப்படி உள்ள நபருக்கு சமூகநீதி பேசும் திமுக எப்படி இப்படிப்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கியது..? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகமாக இருக்கும், வன்னியர் சமூகத்திற்கும், ஆதிதிராவிடர் சமூகத்திற்கும், கொங்கு வெள்ளாளர் சமூகத்திக்கிற்கும் வழங்கவில்லை ஆனால் குறைந்த ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு எப்படி பொறுப்பு வழங்கியது திமுக..?இதே வன்னியர் சாதி சங்கமோ, கொங்கு வெள்ளாளர் சாதி சங்கமோ, ஆதி திராவிடர் சாதி சங்கமோ பதவியில் இருந்தால் பொறுப்பு வழங்கிருப்பார்களா..? அறிஞர் அண்ணா ஒருபோதும் தன் சாதியை சொல்லி அரசியல் செய்ததில்லை அனால் சாதி சங்கத்தில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்து சாதி அரசியல் பேசும் நபர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கி தூக்கி பிடிக்கிறது சமூக நீதி திமுக இப்படி பல்வேறு விமர்சனங்களை திமுக மீது தருமபுரி திமுக நிர்வாகிகளும் விசிக நிர்வாகிகளும் வைப்பதால் அங்கே அதிமுக, பாமக குஷியாக உள்ளார்களாம், மறுபக்கம் ஏப்பா கெளதம், முருகவேல் தன் சாதி உறவை ஒன்றிணைத்து திராவிட கொள்கை பக்கம் கொண்டு வருவது பெரிய புரட்சி அதனை ஊக்கப்படுத்தும் விதமாக கூட இந்த பொறுப்ப்பாக இருக்கலாம் அதை ஏன் இப்படி அரசியல் செய்ரீங்க என இவர்களுக்கு ஆதரவாக கேள்வி எழும்போது" அப்படின்னா இனி நாங்களும் சாதி சங்கத்தில் இருக்கிறோம்
சாதி சங்கத்தை வளர்க்கிறோம் அப்போ பொறுப்பு போடுவீங்களா..? சாதி இனம் பிரிவு பேசுபவனை மனித குல சாக்கடை என்றார் பெரியார் அவரின் கொள்கை வழியில் வந்த இந்த திமுக கடசி எதை தூக்கி பிடிக்கிது என்று பாருங்கள் தருமபுரி திமுகவே நாறிப்போகுது என்று சாதி சங்கத்தில் இருக்கும் கெளதமிற்கும் முருகவேலுவிற்கும் எதிரலை வீசுகிறது தருமபுரி நகரப்பகுதியில். இதுகுறித்து சமூகநீதி பேசும் திமுக தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்வியில் எதிர்க்கட்சி பொறுப்பாளர்களும் ஒன்று சேர்ந்து தருமபுரி திமுக நிர்வாகிகளுக்கு ஆதரவாக நின்று மன ஆறுதல் கூறி வருகிறார்களாம்..! விளம்பர ஆட்சியா..? விடியல் ஆட்சியா...? சமூகநீதி ஆட்சியா...? இல்ல சாதி சங்க வளர்ப்பு ஆட்சியா திமுக..? என்ற மனக்குழப்பத்தில் வளரும் தருமாபெருவி திமுக வன்னியர் கோட்டை குழம்பி தவிக்கிறது..? கெளதமிடம் சாதி சங்கத்தில் நீங்கள் உள்ளீர்களா என்ற கேள்வி எனக்கே தெரியாமல் பொறுப்பு போட்டுவிட்டார்கள் அதிலிருந்து வெளியே வந்துவிட்ட்டேன் என்றார்..முருகவேல் திமுக ஐ டி விங்கிற்கு பட்டைய போட்டுட்டு தனது செங்குந்தர் சாதி சங்கத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்..!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1