“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி!

Nov 28, 2026 - 00:07
Nov 28, 2026 - 00:08
 0  1
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி!

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி!


இந்தாண்டு கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் ஒருமுறை வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், அந்த உத்தரவின்படி கல்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (27.11.2026) விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது, ‘நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் நாளை  ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்ற வேண்டும். தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம். மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சிஆர்பிஎஃஒ பாதுகாப்பு படையினை நிறுத்த வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு பா.ஜ.க தவிர தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதிவை வெளியிட்டுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai Editor @ Publisher : Msp Manibharath