திருமுல்லைவாசலில் மாநில டிராகன் படகுப் போட்டி: உள்ளூர் அணிக்கு தங்கம்

Oct 1, 2026 - 22:32
 0  14
திருமுல்லைவாசலில் மாநில டிராகன் படகுப் போட்டி: உள்ளூர் அணிக்கு தங்கம்

திருமுல்லைவாசலில் மாநில டிராகன் படகுப் போட்டி: உள்ளூர் அணிக்கு தங்கம்

சீர்காழி அக்.1

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழ்நாடு கயாக்கிங் மற்றும் கனோயிங் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான டிராகன் படகு சாம்பியன்ஷிப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருமுல்லைவாசல் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. சென்னை எஸ்டிஏடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், தஞ்சை சோழா அணி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.

திருமுல்லைவாசலில் கடந்த செப். 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த படகு 

போட்டியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெய்யப்பன், பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் பாண்டியன், நிர்வாகக் குழு உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிக்கு ஊர் தலைவர் விஜயபாலன் மற்றும் திருமுல்லைவாசல் ஊர் பொதுமக்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்தனர். மாவட்ட வர்த்தக அணித் தலைவர் முத்துக்குமார், ஸ்ரீதர், பிரேம் ஆகியோரும் போட்டி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.இந்நிகழ்வின் மூலம் திருமுல்லைவாசல் பகுதியில் இளைஞர்களுக்கு நீர் விளையாட்டுகள் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், டிராகன் படகு, கயாக்கிங், கனோயிங் போன்ற விளையாட்டுகளில் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கும் இது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai