எப்போது பார்த்தாலும் சென்சார் பிரச்சனை எச் புதுப்பட்டி சுங்கச்சாவடி மீது நடவடிக்கை எடுத்து எதை கழட்டியது நெடுஞ்சாலைத்துறை..? எல்லாம் வெத்து வெட்டு விளம்பரமா..? இல்ல நடவடிக்கை எடுக்க முன் வருமா..? பாஜக கவனத்திற்கு
எச் புதுப்பட்டி சுங்கச்சாவடி மீது நடவடிக்கை எடுத்து எதை கழட்டியது நெடுஞ்சாலைத்துறை..?
எல்லாம் வெத்து வெட்டு விளம்பரமா..? இல்ல நடவடிக்கை எடுக்க முன் வருமா..?
சேலம் மற்றும் அரூர் நெடுஞ்சாலையில் இடைப்பட்ட பகுதியில் 2024 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட எச் புதுப்பட்டி சுங்கச்சாவடியில் தொடர்ந்து சிக்னல் பிரச்சனை ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது பற்றி யாரிடம் புகார் கொடுப்பது என்பது கூட தெரியாமல் திணறி வ யாரும் சூழலில் 1033 என்ற என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை கூறினாலும் அந்த என்னை தொடர்பு கொண்டு கூறினால் அப்படி என்ன நடவடிக்கை எடுத்து விடுகிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை இது தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் துரோகம் செய்கிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை. என்பதை உணரவேண்டும். 100 சுங்கச் சாவடிகளை NHAI கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடி வீடியோ (Live Feed) மூலம் கண்காணித்து வருவதாக கூறினாலும் இந்த எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடியில் இருக்கு லேன் 1
லேன் 2
லேன் 3
லேன் 4
இந்த லைனில் லேன் 1 மற்றும் லேன் 4 மட்டுமே செயல்படுகின்றது. அந்த நேரத்தில் வாகனங்கள் தொடர்ந்து வந்தால் பாஸ்ட் ட்ராக் ஸ்கேனிங் செய்வதில் கோளாறு ஏற்பட்டு மூன்று லேன் லைனும் பிளாக் ஆகிவிடுகிறது. அப்போது ஃபாஸ்ட் ட்ராக் ஸ்கேனிங் அருகில் இருக்கும் வாகனங்களை வேறொரு லேன் சாலைக்கு மாற பின்வருமாறு சுங்கச்சாவடி பணியாளர்கள் சொல்வதைக் கேட்டு வாகனங்களை பின்னால் எடுத்தால் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் சென்சார் வேலை செய்யவில்லை என்ற காரணத்தை அவ்வபோது டோல்கேட் பணியாளர்கள் கூறுவதைக் கேட்டு தினந்தோறும் பயணித்து வருவது பெரும் கொடுமையாக உள்ளது. சில நேரங்களில் தனியார் பேருந்துகள் காத்திருக்கும் நிலை உருவாகும் சூழல் நிலவும் போது அவர்கள் அடுத்த அதிவேகமாக பயணம் செய்ய நேரிடுகிறது. சாலை வரிகளும் கட்டினாலும் , இறுதியாக டோல்கேட் கட்டணம் என புதிய சாலை வரி வாங்கி அரசை நடத்தினால் நாங்க எவ்ளோ பெரிய கொடுமையான நாட்டில் வாழ்கிற்றோம் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சொல்லும் கருத்துதான் நியாபகம் வருகிறது. இப்படிபட்ட குறைகளை பார்க்காமல் இதுவரையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் சுங்கச்சாவடியில் இருக்கும் வேலை செய்யாத சென்சார் போர்டையா கழட்டிருப்பாங்க என்ற கேள்வி எழுகிறது. சுங்கச்சாவடியில் தவறுகள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி எடுக்கலாம் இந்த எச் புதுப்பட்டி சுங்கச்சாவடிக்கு தேசிய நெடுச்சாலை சலுகை கொடுக்கிறது என்றால் இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜீ க்கு பெரும் துரோகத்தையும் மோடி ஜீ யை நம்பும் மக்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தே சம்பளம் வாங்குகிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை என்பதுதானே அர்த்தம்..!
இப்படி தமிழ்நாட்டில் தேசிய நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் பணியாளர்கள் ஓழுங்காக வேளை செய்யாமல் ஏமாற்றுவதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பெரும் இழப்பு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் பாஜக கட்சி நேர்மையாக இருந்தால் போதாது தனது ஆட்சிக்கு கீழ் பணியாற்றும் பணிகள் திட்டங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0