குறட்டை விட்டு தூங்கும் தருமபுரி மாவட்ட கல்வி நிர்வாகம் - பள்ளி மாணவர்களை ரவுண்டு கட்டி சதுரங்க வேட்டை நடத்தும் மலர் கண்காட்சி - களத்தில் இறங்குவாரா மாவட்ட ஆட்சியர்


குறட்டை விட்டு தூங்கும் தருமபுரி மாவட்ட கல்வி நிர்வாகம் - பள்ளி மாணவர்களை ரவுண்டு கட்டி சதுரங்க வேட்டை நடத்தும் மலர் கண்காட்சி - களத்தில் இறங்குவாரா மாவட்ட ஆட்சியர்   தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வி ரீதியான மற்றும் வரலாற்றுக்குரிய சிற்பங்கள் மூலமாக வரலாறு கூறும் கண்காட்சிகளை தமிழக அரசும் மற்றும் ஒரு சில தன்னார்வலர் அமைப்புகள் சேர்ந்து கண்காட்சிகள் நடத்தி அதை மாணவர்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்தி வருகின்றனர். 


இதற்கு எதிர்மறையாக மாணவர்களின் மூலமாக கண்காட்சி என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறையாவது பல மாவட்டங்களில் மலர் கண்காட்சி என்ற ஒரு பெயரில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என படிக்கின்ற மாணவர்களை குறி வைத்து பள்ளி வளாகத்திற்குள் சென்று ஆசிரியர்களை சமரசம் செய்து பள்ளி மாணவர்களுக்கு எல் கே ஜி முதல் 9 ஆம் வகுப்பு வரை அனுமதி இலவசம் என்று கூறி ஆசிரியர்களிடம் ஏதோ ஒரு கதைகளை அவிழ்த்துவிட்டு மாணவர்களை கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து வாருங்கள், கட்டாயம் பெற்றோர்களுடன் வரச்சொல்லுங்கள் என்று கூறி தற்போது தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பகுதிக்கு உட்பட்ட  பொம்மிடி B. நடூர் பகுதியில் மலர் கண்காட்சி நடைபெறும் என ஒவ்வொரு அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளில் தனது வியாபார யுத்தியை பயன்படுத்தி வருகின்றனர் என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காரணம் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்று கூறிவிட்டு அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களுக்கு அனுமதி சீட்டு 40 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து மாணவர்களை வைத்து பெற்றோர்களை வர வைத்து அதில் பணத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் அந்த அனுமதி சீட்டை கொடுத்து வீட்டில் உள்ள பெற்றோர்களை அழைத்து செல்ல வேண்டும் என கேளுங்கள் என்று கூறியுள்ளனர்.

இது மாணவர்களின் மனதில் ஆழமாக பதிந்து பெற்றோர்களிடம் அடம்பிடித்து கண்ணீருடன் கேட்டால் மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்ல கட்டாயம் ஏற்படும். பிறகு மலர் கண்காட்சிக்கு சென்றால் அங்கே உள்ள தின்பண்ட கடைகள், விளையாட்டு, பொருட்கள், ரங்கராட்டம், போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அங்கே 50  முதல் 200 வரை பணம் வசூல் செய்ய சரியான  திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.


தனியார் நிறுவன கண்காட்சி நடத்தும் அனுமதி சீட்டு அரசு பள்ளிகளில் கொடுத்து அழைப்பு கொடுத்த சம்பவம் பற்றி எந்த ஒரு ஆசிரியர்களும் மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 





அரசு எவ்வளவு கடன் சுமைகளை பெற்று வந்தாலும் படிக்கின்ற மாணவர்களிடம் பணம் வசூல் செய்யாமல் அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் பொழுது தருமபுரி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரியாமல் படிக்கின்ற சிறு மாணவர்களின் மனதில் கார்ப்பிரேட் பித்தலாட்டத்தை மலர் கண்காட்சி மூலம் செய்பவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் துணை போகிறார்களா என்ற கேள்வியை பெற்றோர்கள் முன் வைக்கின்றனர். 


மேலும் மலர் கண்காட்சி நடத்தும் நிகழ்ச்சியாளரிடம் எவிடன்ஸ் பார்வை ஆசிரியர் எதற்காக அரசு பள்ளி மாணவர்களை மலர் கண்காட்சிக்கு அழைத்தீர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கினீர்களா என  கேட்டபோது சார் எங்க பொழப்புக்கு என்ன சார் செய்ய என பதில் தருகிறார். மாணவ பெற்றோர்களே நீங்கள் கண்காட்சிக்கு செல்லுங்கள் தவறில்லை உங்களுக்கான கல்வி ரீதியான, அறிவியல் பூர்வமான, வரலாற்று நூல்கள் ரீதியான கண்காட்சிக்கு செல்லுங்கள் அது உங்கள் எதிர்காலத்திற்கான வாழ்க்கை பாதையை தொடங்கி வைக்கும் என்பதை உணருங்கள்.   ஒன்றுமே தெரியாமல் குறட்டை விட்டு தூங்கும் மாவட்ட கல்வி நிர்வாகம் மீது  தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும்  களத்தில் இறங்கி மாணவர்களின் தேவை எதுவோ அதற்கான கண்காட்சிகள் மற்றும் அவர்களின் கல்வி விடியலுக்கு வழி காட்டுங்கள் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments