தர்மபுரிக்கு வரும் முதல்வரே..! உண்ணாவிரதம் இருக்கும் அரூர் நெடுஞ்சாலைத்துறை..! நாறிப்போகும் அரூர் நகராட்சி வரை இதுதான் உங்கள் ஆட்சியா..?



தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் டிசம்பர் 14 மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். 
முதல்வர் வருகையால் மஞ்சவாடி முதல் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் ஊத்தங்கரை போன்ற சாலை பகுதியில் உள்ள குப்பைகள் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி பேரூராட்சி போன்ற துறைகள் இணைந்து சாலையை அகலப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆனால் அரூர் நான்கு ரோடு முதல் திரு வி க நகர்,  ரவுண்டானா சாலை, பேருந்து நிலையம் முதல் வழியாக மார்கெட் பைபாஸ் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை எடுப்பதில்லை மேலும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் நிறுத்தி கடைகளுக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர் மேலும் சாலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வரும் நில மோசடி சமூகவிரோதிகள் சாலை ஓரங்களில் வாகன நிறத்தில் நிறுத்தினால் கூட இது எங்கள் வீட்டு வாசல் இங்கே நிற்க வேண்டாம் என போர்க்கொடி தூக்குகின்றனர் ஆனால் சாலையில் குப்பைகள் இருந்தால் அவர்கள் அதை அகற்றுவது கூட கிடையாது சாலைகள் ஆக்கிரமிப்பு செய்து பேருந்துகள் லாரிகள் இருசக்கர வாகனங்கள் கார்கள் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தால் கூட அவர்கள் சாலை விரிவாக்கத்திற்கு ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டுக் கொடுப்பதில்லை. இப்படி இருக்கும் சூழலில் நெடுஞ்சாலைத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஏதோ உண்ணாவிரதம் இருந்து போராளிகள் சாதிப்பது போல சாலைகளை தூய்மை செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து விட்டோம் என்று மிதப்பில் இருக்கின்றனர். தற்பொழுது முதல்வர் வருகையையொட்டி கூட அரூரில் சாலையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூட துணிவு இல்லாமல் திராணியில்லாமல் குறட்டை விட்டு தூங்குகிறது அரூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பிரிவு. 

நெடுஞ்சாலைத் துறை ஒரு பக்கம் இப்படி இருக்க அரூர் நகராட்சி துறை நாறிப் போய் இருக்கிறது. குறிப்பாக அரூர் அம்பேத்கர் நகர், முருகன் கோவில் தெரு, திரு வி க நகர், ஆசிரியர் நகர், கீழ் பாட்ஷா பேட்டை, போன்ற பகுதிகளில் சாலைகளில் வீடுகளில் குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர் இதனால் அக்கம்பக்கத்தினர் கடை வியாபாரிகள் வாகன ஓட்டிகள் பெருமளவில் பாதிக்கின்றனர் இது குறித்து வீடுகளில் குடியிருக்கும் நபர்கள் சாலைகளில் கொட்டும் குப்பைகளை அகற்றக் கோரியும் குப்பைகளை கொட்டும் வீட்டு உரிமையாளர்களிடம் எந்த ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தாமலும் அவர்களுக்கு அபராதம் விதிக்காமலும் சலுகை கொடுத்து வருகின்றனர் காரணம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இவர்களிடம் 100, 50 க்கு பணத்தை பெற்று ஊரை நாரடித்தவர்கள் அரூர் நகராட்சி துறை
இது குறித்து தர்மபுரிக்கு வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் காரணம் முதல்வர் வருகை என்பது தான் இது போன்ற சுத்தம் சுகாதாரம் செயல்படுத்தப்படுகிறது திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல கௌரவத்திற்கான ஆட்சி என்று இந்த செயல் உணர வைக்கிறது என்று பொதுமக்கள் நன்றி தெரிவித்தும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Comments