தமிழக வரலாற்றிலேயே பரபரப்பு -- தருமபுரி pocso சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கியதால் கைது.! வழக்கறிஞர் செயலுக்கே நாசமாக்கிய வழக்கறிஞர்
தமிழக வரலாற்றிலேயே பரபரப்பு -- தருமபுரி pocso சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கி கைது !
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன் மகன் செந்தில் என்பவரின் மகளான ( பெயர் குறிப்பிடப்படவில்லை ) மேற்கண்ட அரசுப் பள்ளியில் படித்த (2022 ஆம் ஆண்டு) பெண் குழந்தையை அதே கிராமத்தைச் சேர்ந்த மாதையன் மகன் சுரேந்திரன் என்பவனால் கடத்தப்பட்டு பாலியல் குற்றம் செய்தது தொடர்பாக பொம்மிடி காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கானது தற்போது தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
மேற்கண்ட போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor - Special POCSO Court ) தருமபுரி, கல்பனா, மேற்படி பெண் குழந்தையின் தந்தை செந்தில் என்பவரிடம் இந்த போக்சோ வழக்கை நடத்துவதற்கு 25000/ ரூபாய் லஞ்சம் கேட்டு நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தொந்தரவு செய்து வந்துள்ளார். செந்தில் விருப்பம் இல்லாமல் இதுவரை 10,000/ ரூபாய் லஞ்சம் கட்டாயத்தின் பேரில் கொடுத்தும், மேலும் 15,000 ரூபாய் கேட்டு அரசு வழக்கறிஞர் கல்பனா தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்ததன் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறை DSP நாகராஜ் அவர்களின் ஆலோசனையின் படி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பெருமாள் அவர்கள் தங்கள் அலுவலக ஊழியர்கள் உதவியுடன் ரகசியமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு மேற்கொண்டு 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது அரசு வழக்கறிஞர் கல்பனாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நேர்மையுடன் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் (INS) பெருமாள் அவர்களை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Comments
Post a Comment