பாப்பிரெட்டிப்பட்டி அருகே இளம்பெண் மரணம், கொலையா, தற்கொலையா அ. பள்ளிப்பட்டி அருகே பரபரப்பு..! காவல் துறை விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இளம்பெண் மரணம், கொலையா, தற்கொலையா அ. பள்ளிப்பட்டி அருகே பரபரப்பு..! காவல் துறை விசாரணை 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ. பள்ளிப்பட்டியை சேர்ந்த பிரியா வயது 21 பெண்ணை மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் வயது 27 என்ற இளைஞர் சுமார் 3 ஆண்டுக்கு முன்பு காதலித்து சுபாஷ் வீட்டின் ஆதரவில் திருமணம் செய்து கொண்டனர். 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாக பிரியா தனது தாய் வீடான அ.பள்ளிப்பட்டியில் தங்கியுள்ளார். பிறகு டிசம்பர் 3 இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் தூக்கில் தொங்கி கீழே விழுந்தது போல் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் அவரது தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அவரது கணவர் சுபாஷ் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சுபாஷ் தனது குடும்பத்தினருடன் பிரியா இறப்பிற்கு அவரது தாய்தான் காரணம் என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த அ. பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் Dsp ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியில் பரபரப்பாக  குவிந்த மக்களை அப்புறப்படுத்தி விசாரணை முடியும் வரை அமைதி காக்கவும் என்று கூறியதை அடுத்து ப்ரியாவின் கணவர் உறவினர்கள் அமைதி காத்து நின்றனர்.  மற்றும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னர் அ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கூறுகையில் எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் கூற முடியும் தவறதுலாக ஏதும் நாமே கற்பனை செய்து வதந்திகளை பரப்பவேண்டாம் என்று கூடியிருந்த பொதுமக்களிடம் கூறிய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இறந்து போன ப்ரியாவின்  கணவர் சுபாஷ்  கூறுகையில் சந்தேகம் உள்ளது கடந்த நான்கு மாதங்களாக எனது மனைவியிடம் விவாகரத்து வாங்கி கொள் நம் குடும்பத்துக்கு இது சரி வராது என்று அவளை துன் புருதியதாகவும், ப்ரியாவின் தந்தை இறப்புக்கன காப்பீடு தொகை பணம் பெறுவதற்கு எனது மனைவியிடம் சமாதானமாக பேசி வீட்டில் சேர்த்தனர் காலை நன்றாக பேசி சென்றேன் ஆனால் என்னுடைய மனைவி தற்போது இருக்கும் நிலையை யோசித்து கூட பார்க்க முடியவில்லை, அவள் தைரியமான பெண் எனவே அவள் தற்கொலை செய்து கொள்ள கோலை அல்ல என் மனைவி மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Comments