தர்மபுரியில் பட்டியலின பெண்ணை கர்பமாக்கிய ராணுவ வீரர் ..! பாதிக்கப்பட்ட பெண்ணை - 2 மாதமாக அலையவிட்ட காவல் ஆய்வாளர் புஷ்பராணி, களத்தில் இறங்கிய விசிக - நம்பிகை கொடுத்த தருமபுரி எஸ் பி மகேஸ்வரன்
பாதிக்கப்பட்ட பெண்கள் சட்ட ரீதியாக ஆதாரம் கொண்டு காவல்துறையை நாடினால், நாடி துடிப்புசாகும் வரை பாதிக்கப்பட்ட பெண்களை சில காவல்துறை அலைய விடுகிறது. இதுபோன்ற சம்பவங்களைக்கொண்டு பாஜக த வெ க கட்சிகள் களத்தில் இறங்கி பெண்களுக்கு பாதுகாப்பு எங்கள் கட்சி என பொம்மலாட்டம் ஆடுகிறது. அதற்கு யார் வாய்ப்பு கொடுப்பது என திமுக ஆழமாக யோசிக்க வேண்டும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின்...
ஆனா இங்க எந்த முதல்வர் யோசிச்சா என்ன டிஜிபி யோசிச்சா என்ன எஸ் பி யோசிச்சா என்ன டிஎஸ்பி யோசிச்சா என்ன என்று அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் புஷ்பராணி பாதிக்கப்பட்ட பெண்ணை 2 மாதமாக அலையவிட்டுள்ளார். இதைக்கண்டு விசிக களத்தில் இறங்கிய பின்னரே நடவடிக்கை எடுக்க தருமபுரி காவல்துறை நடைபயணம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தருமபுரி எஸ் பி மகேஸ்வரன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக நீதி கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நம்பிகை கொடுத்துள்ளார். அப்படி என்றால் காவல்துறை அதிகாரிகளின் பெயரை கெடுப்பது இங்கே கீழ்மட்டமா மேல் மட்டமா என்பதை நீங்களே அறிவீர்கள்... அப்படிப்பட்ட சம்பவம். பாதிக்கப்பட்ட பெண் அதன் கதை என்ன..???
தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு வட்டம் ,மாரண்டஹள்ளி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (பெயர் மாற்றம்) ராணுவ வீரர் இவர் இறந்துவிட்டார்
இவரது மனைவி வானதி (பெயர் மாற்றம்)
இந்த ராணுவ வீரனின் மனைவி வானதியின் சட்டப் போராட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல இவரது கணவர் நாட்டிற்காக எப்படி போராடினாரோ? அதேபோல இந்த பெண் தனது வாழ்க்கைக்காக பெரும் போராட்டத்தை கையில்லெடுத்துள்ளார். ஆணாதிக்கம் மிக்க இந்த சமூகத்தில் ஒரு பெண் கணவனை இழந்த பின்பு இந்த சமூகத்தில் எவ்வளவு துன்பப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த பெண்ணிற்கு நடந்துள்ள கசப்பான சம்பவங்கள் குறித்து இந்த சமூகம் வெட்கி தலை குனியே வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது
ராணுவ வீரர் தெய்வீகம் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது, வானதிக்கு வயது37 ஒரு மகன் இருக்கிறார், கணவனை இழந்த இந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக தனிமையில் இருந்துள்ளார்.
இதை வசமாக பயன்படுத்திக் கொண்ட தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், பைசுஹள்ளி கிராமத்தை சேர்ந்த சென்ன கேசவன் மகன் வாசுதேவன் வயது 47 இவர் முன்னாள் ராணுவ வீரர்
மேற்கண்ட இறந்து போன ராணுவ வீரர்ஆறுமுகம், காதல் மன்னர் வாசுதேவன் நண்பர்
இந்த பழக்கத்தின் மூலமாக தர்மபுரி ராணுவ வீரர்கள் கேன்டீனுக்கு இறந்து போன ராணுவ வீரரின் மனைவி வானதி வரும்போது எல்லாம்உறவாடிய காதல் மன்னன் வாசுதேவன் இறந்து போன ராணுவ வீரரின் மனைவியோடு நெருக்கமாக பழகியுள்ளார்.
அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகளையும், ஆசை வார்த்தைகளையும், அள்ளி வீசியுள்ளார்.
கணவனை இழந்த அந்த பெண்ணும் இவரது ஆசைக்கு மயங்கி இவருடன்நெருக்கமாக பழகியுள்ளார், இவர்களது பழக்கம் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விதவைப் பெண் பட்டியல் இனத்தைச் சார்ந்த வானதியிடம் அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி இதுவரை 5 லட்சத்திற்கு மேல் பணமாக வாங்கியுள்ளார்.
இவை அனைத்தும் செல்போன் மூலமாக வங்கிப் பரிவர்த்தனை மூலமாக நடந்துள்ளது
இந்த நிலையில் வானதி கர்ப்பமாகி உள்ளார், ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சமூகம் நம்மளை ஏதாவது சொல்லும் என்பதால் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த காதல் மன்னன் முன்னாள் ராணுவ வீரன் வாசுதேவன் ஆத்திரம் கொண்டு
நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது,மாவட்டத்தில் குறிப்பாக தர்மபுரி பகுதியில் வாழும் அனைத்து காவல்துறையினர் அனைவருக்கும்நான் ராணுவ மிலிட்டரி சரக்கு சப்ளை செய்கிறேன்,
அதனால் நான் எதையும் சாதித்துக் கொள்வேன் , நீ என்னை பற்றி எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு?அது எஸ் பி ஆக இருக்கட்டும், டிஎஸ்பியாக இருக்கட்டும், யாரிடம் வேண்டுமானாலும் கொடு,புகாரை யாரும் வாங்க கூட மாட்டார்கள் என ஆணவத்தோடும் சாதி வெறியோடும் அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.
இதனால் மனமுடைந்து போன விதவைப் பெண் மாலதி என்ன செய்வது என யோசித்த போது சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் நடந்த சம்பவங்களையும் பணமோசடியில் ஈடுபட்டு தன்னை இப்போது கர்மமாக்கியுள்ளதாலும்மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாராக கடந்த ஆண்டு22/06/2024அன்று தெரிவித்துள்ளார்
ஆணையமும் கரிசனத்துடன் இரு நபர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளது
அந்த விசாரணை 3 /10 /2024 அன்றுநடைபெற்றது, அப்போது தான் அந்த பெண்ணைஏமாற்றி பல முறை அனுபவித்ததையும், ஏமாற்றியதை ஒப்புக்கொண்ட ராணுவ வீரர் திருமணம் செய்து கொள்ள முடியாது
அவர் கீழ் ஜாதியை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்,
மேலும் இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதற்கு நான் காரணம் அல்ல என தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் தமிழ்நாடு மகளிர் ஆணையம் டி ,என், ஏ டெஸ்ட் மூலமாக நிரூபித்துக் கொள்ளுங்கள் என கடந்த 12 /11 /2024 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
இதன் பெயரில் டிஎன்ஏ டெஸ்ட்க்கு ஒத்துக் கொண்ட விதவைப் பெண் வானதி மருத்துவ பரிசோதனைக்கு தன்னை ஒப்புக் கொடுத்த போதும் காதல் மன்னன் வாசுதேவன் இந்த டி என் ஏ சோதனைக்கு வரவே இல்லை
இதனால் மணமுடைந்த விதவை பெண் வானதிக்கு தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் நந்தன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் குண்டு சக்தி ஆகியோர் உதவி கிடைத்துள்ளது
விஷயத்தை கேள்விப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையிடம் சென்றுபாதிக்கப்பட்ட பெண்ணிற்காக களத்தில் இறங்கி உள்ளனர், இச்சம்பவம் குறித்து மாநில பொறுப்பாளர் பொ.மு. நந்தன் தெரிவிக்கையில்
ஒரு பட்டியல் இனவிதவைப் பெண் வாழ்க்கையை சீரழித்ததோடு, பல லட்ச ரூபாயை அந்த பெண்ணிடம் ஏமாற்றிக் கொண்டு அந்த பெண்ணை கர்ப்பம் ஆக்கியுள்ளார், கர்ப்பத்திற்கு காரணமான இவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண் கேட்டபோது நீ ஒரு பட்டியலில் இன பெண் உன்னை திருமணம் செய்து கொண்டால் சமூகத்தில் என்னை எப்படி மதிப்பார்கள் என ஏளனமாக பேசி அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இவ்வளவு விரிப்புணர்வு காலத்தில் சட்ட போராட்டத்தில் மூலமாக இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்ட போதும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்காமல் அந்த பெண்ணை உதாசீனப்படுத்துவது நியாயம் அல்ல? சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு காதல் மன்னன் வாசுதேவன் மீது வழக்கு பதிவு செய்து எஸ்சி எஸ்டி ஆக்டிங் படி வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் முறையிட்டுள்ளோம் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம், அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டிபாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என என மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் நந்தன் தெரிவிக்கிறார்
தற்போது இந்த காதல் மன்னன் வாசுதேவன்மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 03/01/ 2025 அன்று எஸ்சி எஸ்டி வழக்குப்படி வழக்குப்பதியப்பட்டுள்ளது, ஆனால் குற்றவாளி கைது செய்யப்படவில்லை, குற்றவாளியை திட்டமிட்டு தப்ப விட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருக்கு ஆதரவாக இருப்பவர்களும் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில்
இந்த ராணுவ வீரர் வாசுதேவன் தர்மபுரி ராணுவ கேண்டீனுக்கு வரக்கூடிய இறந்து போனாராணுவ வீரர்களின் மனைவிகளிடம் ஆறுதல் வார்த்தை கூறி அவர்களது செல்போன்களை வாங்கிக்கொண்டு ஆபாச செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்வானதி தெரிவிக்கிறார் ,
மேலும் இந்த நபர் காவல் துறையினருக்கு மிக நெருக்கமாக இருந்து கொண்டு அவர்களுக்கு ராணுவத்தில் இருந்து வரக்கூடிய மது பாட்டில்களை சப்ளை செய்து கொண்டு இது போன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றார்
ஒரு ராணுவ வீரர் இறந்து போன சகராணுவ வீரனின்மனைவியை சீரழித்து கர்ப்பம் ஆக்கியதோடு, அவரிடம் இருந்த பணத்தையும் ஏமாற்றி உள்ளார், இச்சம்பவம் தர்மபுரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கணவனை இழந்து போன ராணுவ வீரனின் மனைவி சட்டபோராட்டத்திற்கு இவ்வளவு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவது இந்த சமூகம் பெண்களை இன்னும் எவ்வளவு பின்தங்கிய நிலையில் வைத்துள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்கிறது
Comments
Post a Comment