தர்மபுரி நல்லாம்பட்டி அமரர் மா பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு மருத்துவமனையால் காலை இழந்த தருமபுரி இளைஞர் !

மருத்துவம் பார்க்கச் சென்ற நபருக்கு தவறான சிகிச்சையால் அவரது இடது கால் முழுவதும் அழுகி காலை அகற்றும் நிலைக்கு ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகம் மீது  நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட திருப்பதி என்பவர் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம்  கோரிக்கை வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செங்கனூர் அஞ்சல் சின்ன பள்ளத்தூர் திருப்பதி தகப்பன் பெயர் கைலாசம் இவர் விவசாயம் செய்து பெங்களூர் பன்னார்கட்டா பகுதியில் கிருஷ்ணா டிரேடர்ஸ் எனும் பெயரில் இரும்பு சாமான்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் பெற்றோர் உதவியுடன் நல்ல முறையில் விவசாயம் செய்து வர்த்தகம் செய்து வருகிறார்.


இவருக்கு பள்ளத்துறை சார்ந்த தங்கவேல் மகள் மாலினி என்பவருக்கும் கடந்த 21/ 08 /2020 ஆம் தேதியில் திருமணம் நடைபெற்ற நல்ல முறையில் வாழ்க்கையே வாழ்ந்துள்ளார் இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 11/ 06 /2022 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விவசாய நிலங்களுக்கு கரண்ட் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விட நிலத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கிணற்றுக்கு சென்றுள்ளார்.


 அப்பொழுது வரப்பில் கால் தவறி விழுந்ததில் அவருடைய இடது கால் அடிபட்டு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
 உடனே அங்கிருந்து அவர்களின் உறவினர்கள் துணையோடு நல்லாம்பட்டியில் இயங்கி வரும் அமரர் மாபெரும் நினைவு எலும்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் அவருடைய இடது காலில் ஏற்பட்ட வலிக்கு காலில் கட்டு போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர்.



அதற்கான மருத்துவ கட்டணம் செலுத்தியுள்ளார் மருத்துவரும் 15 நாட்களில் சரியாகிவிடும் என உறுதி அளித்துள்ளார்.
அந்த மருத்துவமனையின்  மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளும் உட்கொண்டு  வந்துள்ளார்.


அவருடைய இடது காலில் கட்டு போட்ட 4 நாளில் இடது கால் முழுவதும் அதிக வீக்கமும் வலியும் ஏற்பட்டுதால் மீண்டும் 15/ 06 /2022 மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


அப்போது மருத்துவர் கட்டை அகற்றி பார்த்ததில் கட்டுப்போட்ட இடது கால் முழுவதும் அதிக வீக்கமும் காலில் அங்கும் இங்கும் கொப்பளங்களுடன் இருந்தது அப்போது மருத்துவரா அதனால் ஒன்றும் ஆகாது நான் மீண்டும் கட்டு போடுகிறேன் எனக் கூறி கட்டுப்போட்டு மருந்து மாத்திரைகளை கொடுத்து ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என சொல்லி அனுப்பி உள்ளார் அவரது மருத்துவ சிகிச்சையில் நம்பிக்கை இழந்த திருப்பதி என்பவர் அதிகமாக வலி இருந்ததால் அன்று மாலை தருமபுரி டிஎன்வி எலும்பு முறிவு மருத்துவமனை எனும் தனியார் மருத்துவமனையில் மருத்துவரை அணுகி விவரம் கூறியிருக்கிறார் உடனே மருத்துவர் அதனை பரிசோதனை செய்து இது தவறான சிகிச்சையின் காரணமாக காலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு செல்லும்படி ஆலோசனை கூறியுள்ளார்.

பின்னர் அவர்களின் உறவினர்கள் உதவியுடன் அன்று இரவே கோவை கங்கா மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்களுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உங்களின் இடது கால் அழுகி இருப்பதாகவும் உடனடியாக காலை அப்புறப்படுத்த விட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவித்ததால் அவருடைய இடது கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் செலவானதும் மற்றும் அவருடைய எதிர்காலமும் மனைவியின் எதிர்காலமும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் போலியாக மருத்துவம் பார்த்து வரும் அமரர் மா பெருமாள் கவுண்டர் நினைவு எலும்பு முறிவு மருத்துவமனை மருத்துவரின் கவனக்குறைவால் எனது இடது கால் இழந்து விட்டேன் இதற்கு அவருடைய தவறான சிகிச்சையே காரணம் ஆகவே அவர் மீதும் நிர்வாகத்தின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Comments