சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவுநாளில் சாக்கோட்டை க.அன்பழகன்.MLA மற்றும் விசிக பிரமுகர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவுநாளில் சாக்கோட்டை க.அன்பழகன்.MLA மற்றும் விசிக பிரமுகர்கள் மலர் மாலை  அணிவித்து மரியாதை

கும்பகோணம்: டிச,6 – 
இந்திய அரசியலமைப்பின் சிற்பியும், சட்ட மாமேதையுமான டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு தினம் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள சோழன் போக்குவரத்து கழக வாயிலில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கும், சமூக நீதிக் காவலர் தந்தை பெரியார்  திருவுருவச் சிலைக்கும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு, அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி தொகுதி மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, சட்ட மாமேதையின் பங்களிப்பை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர். 


நிருபர் அ, மகேஷ்

Comments