ஒரு குறிப்பிட்ட சமூக ஆதிக்கத்தால் அரூரில் உள்ள மதுபானக்கடை மூலமாக சந்துகடைகள் உருவாகி வருகிறது உளவுத்துறை கவனத்திற்கு...!!!
தருமபுரி மாவட்டத்தில் முக்கிய நகரமாக இருந்து வரும் அரூர் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பணம் லஞ்சமாக பறிக்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பல இடங்களில் இன்னும் பாட்டிலுக்கு மேல் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை ஆகும். காரணம் இங்கு இயங்கி வரும் அரசு மதுபான கடையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிக பணியாளர்களாக இருந்து வருகின்றனர், இதனால் அவர்களின் சமூக ஆதிக்கத்தாலும் அடக்கமுறை எண்ணத்தினாலும் இந்த பத்து ரூபாய் வழிப்பறி செய்யும் ஊழலின் செயலில் அரசு மதுபான கடையில் உள்ள ஒரு சில பணியாளர்கள் இருந்து வருகின்றனர். மற்றும் இவர்களின் மூலமாக இவர்களின் சமுதாயத்திற்கும் மற்றும் இவர்களுடைய உறவுக்காரர்களுக்கு மறைமுகமாக மதுபான சந்து கடை விற்பனை செய்ய மறைமுகமாக மது பாட்டில்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டும் காணாமல் அரூர் காவல் நிலையத்தில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர் மறைமுகமாக கள்ளத்தனத்தில் மதுபாட்டில் விற்கும் திருடர்களுக்கு உதவி செய்கின்றனர் என்று பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சம் கொடுத்து வாங்கும் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்பெல்லாம் சாக்கு பை, அட்டை பெட்டி, மஞ்சப்பை, கட்டை பை போன்றவைகளில் மதுபாட்டில்கள் வாங்கி செல்வார்கள், அப்படி செல்லும்போது காவல் துறையினர் எளிதாக அவர்களை பிடித்து விடுகின்றனர். இதனை அறிந்த மதுபாட்டில்கள் விற்பனையாளர்கள் சந்து கடை விற்பனையாளர்களுக்கு புதிய ஐடியாவை கொடுத்துள்ளனர். அதாவது "ஏப்பா நீ இனிமே சாக்கு பை அட்டை பெட்டில சரக்கு வாங்காத இல்லாட்டி உடனே இங்க இருக்கிற தனிப்பிரிவு காவல்துறையினர் புடிக்கிறாங்க உங்களை புடிச்சா அடுத்து எங்க கிட்ட வந்து சத்தம் போடுறாங்க, அதுமட்டுமா இங்க இரவு நேர பாதுகாப்புக்கு வரும் காவல் துறை அதிகாரிகளும் ரொம்ப கவலைல இருக்காங்க அதனால இனி கூட ஒரு ரெண்டு ஆள கூட்டிட்டு வா உள்ளாடையில் ஆளுக்கொரு 15 பாட்டிலும் வண்டியில ஒரு பத்து பாட்டிலும் எடுத்து வச்சா மொத்தம் 50 பாட்டில் ஆச்சு என்று புது ரூட்டை கொடுத்திருக்காங்க, இதற்கு முழு காரணமே அரசு மதுபானக்கடையில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் இதை செய்கின்றனர் என்று அரூர் காவல் நிலையத்தில் இருந்து பாதுகாப்பிற்கு வரும் காவல்துறையினர் கூறுகின்றனர். இதனால் சுற்றியுள்ள பல சமூக மக்களும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.இப்படி குறிப்பிட்ட சமூகம் மட்டுமே லாப நோக்கத்திற்காக சந்துகடைகளை வைப்பதற்கு மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். இது குறித்து உளவுத்துறைகள், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதுபானக்கடயில் பணியாற்றும் பணியாளர்களை அங்கிருந்து மாற்றி அமைத்தால் மட்டுமே இதற்கான முடிவு பிறக்கும் மாற்றம் இருந்தால் மட்டுமே இங்கிருக்கும் நேர்மையான காவல் துறையினருக்கு நிம்மதியும் இருக்கும் என்பதை அரசு அதிகாரிகள் உணரவேண்டும் என்பததே ஒட்டு மொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
Comments
Post a Comment