கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர் #My_Dharmapuri #evidenceparvai

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர்

'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர். இவரது பிறந்தநாளை மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி அரசு மருத்துவமனை அருகே பொது மக்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ், இரயில்வே ஒப்பந்ததாரர் பரமசிவம், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா செயலாளர் தமிழ்செல்வன் பொருளாளர் ஜலபதி ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, அமைப்பாளர்கள் செந்தில், முஹம்மத் ஜாபர், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு காமராஜரை வணங்கினர்.

Comments