ஆருத்ரா தரிசனம் இன்று, அரூர் ஸ்ரீ வர்ணீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்பு நடராஜ பெருமாளின் திரு வீதி உலா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம் இன்று, அரூர் ஸ்ரீ வர்ணீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்பு நடராஜ பெருமாளின் திரு வீதி உலா நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை ஸ்ரீ வர்ணீஸ்வரி உடனமர் வர்ணீஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன தினமான இன்று  அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு திரு நடன தீப ஆராதனை தரிசனம் நடைபெற்றன. அப்போது காலை முதல் இருந்தே திருக்கோவிலுக்கு வருகைபுரிந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடராஜரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிராமிய இசைக்கருவியான எக்காளம் வாசிக்க, செண்டை மேளம் முழங்க பேருந்து நிலையம் பஜார் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் திருவிதி உலா  நடைபெற்ற அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து நடராஜரை வழிபட்டனர்.

Comments