கும்பகோணம் நில ஆக்கிரமிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கும்பகோணம் நில ஆக்கிரமிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


மதுரை: நவ: 7 -
கும்பகோணம் மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுப் பயன்பாட்டு நிலத்தை போலிப் பத்திரப் பதிவு மூலம் ஆக்கிரமித்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, போலிப் பத்திரப்பதிவை ரத்து செய்யுமாறு கும்பகோணம் மாநகராட்சி ஆணையருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விவரம்: 

பொது நிலம் அபகரிப்பு
கும்பகோணம் மாநகராட்சி, கணபதி நகர், வார்டு 3-ல், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 11,452 சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் செந்தில் முருகன், மற்றும் பூக்கடை ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரிட் மனு (W.P.(MD) No.30697 of 2025) தாக்கல் செய்தனர்.

மனுவில், 1985 ஆம் ஆண்டுக்கு முன்பே தளவமைப்பின்போது (Layout) ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிலத்தை, கும்பகோணம் பேட்டை தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் (வழக்கில் 7வது எதிர்வாதி) போலி ஆவணங்கள் மூலம் தன் பெயருக்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வருவாய் ஆவணங்களில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட பிறழ்வுகளை (Mutation) அனுமதிக்கக் கூடாது என்றும், ஆவணங்களை 1985 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரினர், 

நீதிபதியின் விசாரணை:

நீதியரசர் டாக்டர் அனிதா சுமந்த் (Dr. Anita Sumanth, J.) அவர்கள் வழக்கை விசாரித்தார், அரசுத் தரப்பில் ஆவணங்கள் சரியாக இருந்தும் எப்படி போலிப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்பது குறித்து விசாரணையின்போது விவாதிக்கப்பட்டது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இந்த வழக்கில் எதிர்வாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்,

 நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு:

வழக்கை விசாரித்த நீதியரசர், 
பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய்த் துறையிர், அஜாக்கிரதையாக செயல்படுவதாகவும் இந்த ஆக்கிரமிப்புச் செயலைக் கடுமையாகக் கண்டித்ததுடன்
 நிலத்தின் மீதான அனைத்துப் போலி ஆவணங்களையும், குறிப்பாக 27.06.2025 தேதியிட்ட ஆவண எண் 3573/25 உள்ளிட்ட பதிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக
 கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் 12 வாரங்களுக்குள் இந்த ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, நிலத்தை மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நிருபர் அ, மகேஷ்

Comments