பொம்மிடியில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பொம்மிடியில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

 பாப்பிரெட்டிபட்டி. ஆக, 10-

 ஆகஸ்ட்டு 10ல்  நீதியரசர் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்த.தலித் கிறுஸ்தவர்களை எஸ்சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துறை ஏற்று அதை நடைமுறைபடுத்த கோரி தலித் கிறுஸ்தவர்கள்  நாடு முழுவதும் அகஸ்டு 10ம் தேதியை கறுப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர்
  அதன்படி தர்மபுரி மறை மாவட்ட தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் பொம்மிடியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் அறப்போராட்டம் நடைபெற்றது


 இந்த போராட்டத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் ஃபயர் தலைமை தாங்கினார், தமிழக ஆயர் பேரவையின் எஸ்சி. எஸ்டி பணிக்குழு மாநில பொருளாளர் எம். எப் ,ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார் 
 கவிஞானி அன்பு தீபன் ஆதிதிராவிடர் நலச்சங்கம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் சிறப்புரையாற்றினார், இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் , மற்றும்பொம்மிடி, பி பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை ,அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை என தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்


 இறுதியாக தர்மபுரி மறை மாவட்ட எஸ்டி ,எஸ் டி பணிக்குழு செயலாளர் பாதர் மோசஸ் நன்றியுரை வழங்கினார்

Comments