மீட்புத்துறையாக மாறிய சம்பவம் பாராட்டைப் பெற்று வருகிறது
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூர் கிராமத்தில் உள்ள 60 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு இளைஞர் சுமார் 2 மணிநேரமாக உயிருக்கு போராடி வருகிறார் என்று தகவல் வந்த நிலையில் உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிய இளைஞரை கிணற்றில் இறங்கி தீயணைப்புத்துறை வீரர்கள் அந்த இளைஞரை உயிருடன் மீட்டனர். கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்த பின்பு தவறி விழ்ந்து விட்டார் என்று விசாரணையில் தெரிய வந்தது. இது சமூக வலைத்தளங்களில் பரவி வர கடவுள் வர்ரார்ரோ இல்லையோ கூப்டா மணி அடித்துக்கொண்டு தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து விடுகிறார்கள் என பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறைக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment