கூத்தாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே புதுமண தம்பதி அழைத்து வந்த மினிடோர் தலைகுப்பற விழுந்து விபத்து 29 பேர் படுகாயம் -அரூர் எம்எல்ஏ நேரில் ஆய்வு

கூத்தாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே புதுமண தம்பதி அழைத்து வந்த மினிடோர் தலைகுப்பற விழுந்து விபத்து 29 பேர் படுகாயம் -அரூர் எம்எல்ஏ நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 29 நபர்கள் மினி டோரில் புதுமண தம்பதிகளை அழைத்து வருவதற்காக வேட்ரப்பட்டி கிராமத்திற்கு செல்லும் போது கூத்தாடிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தன.

இதில் 29 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு முதல் உதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிக காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராட கூடிய நிலையில் உள்ள சுமார் 4 பேரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்  சென்றுள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களை நலம் விசாரித்தார்

இதில அரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்ஆர் பசுபதி

அரூர் வட்டாட்சியர் பெருமாள் விடுதலை சிறுத்தை கட்சி அரூர்தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, ஜெயசாந்த், சின்னத்தம்பி, ராஜ்குமார் மாது, துரைவலன், திராவிட கழக பகுத்தறிவு மாவட்ட அமைப்பாளர் சண்முகம், பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் அல்லி முத்து, திருவேங்கடம், திமுக ஒன்றிய செயலாளர் வேடம்மாள், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், நகர செயலாளர் முல்லை ரவி, மருத்துவமனையில் பார்வையிட்டனர்.

Comments