தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.?

தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.? 
தருமபுரி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்களின“ கோரிக்கையின் காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறம் திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டு இக்குடோனுக்கு தஞ்சை மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் தர்மபுரி ரயில்வே நிலையத்திற்கு நெல் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனில் இருப்பு வைக்கப்படுகிறது.   இந்நிலையில் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில் பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர் பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை எடுத்து விஜயலன்ஸ் பிரிவினர் தருமபுரி திறந்தவெளி நெல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் 7000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கேட்டபோது திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல்  மூட்டைகள் வந்துள்ளது.  போதிய பணியாளர்கள் இல்லாததால் லோடுமேன்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியவில்லை நெல் மூட்டைகள் குறைய  வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல் படியே 7000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மீதமுள்ள 15 டன் நெல் மூட்டைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இதன் முடிவில் நெல் மூட்டை அளவு குறைந்தது  தெரிய வந்தால் இது தொடர்பாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Comments