முதல்வர் ஸ்டாலின் அழைத்த அழைப்பு அதிர்ச்சி அடைந்த பாப்பிரெட்டிப்பட்டி திமுக நகர செயலாளர் ஜெயச்சந்திரன்..
முதல்வர் ஸ்டாலின் அழைத்த அழைப்பு அதிர்ச்சி அடைந்த பாப்பிரெட்டிப்பட்டி திமுக நகர செயலாளர் ஜெயச்சந்திரன்..
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் படிவம் திருத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த பணியில் திமுக கழக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திற்கு டப் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் மும்மரமாக பணியாற்றி வருகின்றனர். இது குறித்து தருமபுரி மாவட்டத்தில் சிறந்த திமுக நகர செயலாளர் என பெயர் பெற்ற ஜெயச்சந்திரன் அவர்களுக்கு திடீரென்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அழைத்த அழைப்பால் பாப்பிரெட்டிப்பட்டி திமுக நகர செயலாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் மகிழ்ச்சியான அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது எஸ் ஐ ஆர் படிவம் திருத்தும் பணிகளை நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே நீங்கள் சிறந்த நகர செயலாளர் என பெயர் பெற்றுள்ளீர்கள் அந்த அளவிற்கு உங்கள் பணிகளும், உங்களை சார்ந்த நம்மை சார்ந்த திமுக தொண்டர்களிடம் இருக்கும் என நம்புகிறேன் என்று கூறி பாப்பிரெட்டிப்பட்டி திமுக நிர்வாகிகளுக்கு ஒரு மகிழ்ச்சியை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
Comments
Post a Comment