தருமபுரியில் வளரும் திமுகவின் அராஜகம்...!! நிலத்தை அரூர் சூரிய தனபால் புடிங்கிட்டாரு.. சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயி..
அரூரில், அடியாட்களுடன் வந்து தங்களது நிலத்தை அபகரிக்க தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் முயற்சிப்பதாக கூறி, பாதிக்கப்பட்டோர் பெட்ரோல் கேனுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரியம் அலுவலகம் எதிரில், மேட்டுப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் அவரது உறவினர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை அரூர் நகராட்சி துணைத் தலைவர் தனபால் அடியாட்களுடன் வந்து அபகரிக்க முயற்சிப்பதாக கூறி, அவரை கண்டித்து கோஷமிட்டபடி, அரூர் - சிந்தல்பாடி சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
மணிவண்ணனின் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் கோவிந்தன், மனோகரன், குமார் ஆகியோருக்கு, 3.26 ஏக்கர் நிலத்தை கடந்த, 1986ல் தர்மபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர்களது தாத்தா உத்தண்டி உயில் எழுதியுள்ளாராம். இந்நிலையில் உறவினரான சேகர் என்பவரிடமிருந்து, 2.79 ஏக்கர் நிலத்தை ஆசை வார்த்தை கூறி, 1997ல் தற்போதைய, அரூர் நகராட்சித் துணைத் தலைவர் தனபால் தனது பெயருக்கு எழுதி வாங்கி விட்டார். இந்நிலையில், தங்களது நிலத்தில் உள்ள, 21 சென்ட் நிலம் அவருக்கு சேர்வதாக கூறி, தனபால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அதிகாரிகளை மிரட்டி சிட்டா வாங்கியதாக பாதிக்கப்பட்டோரின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட அடியாட்கள் மற்றும், 7 பொக்லைன் வாகனங்களுடன் வந்த தனபால், எங்களது நிலத்தில் நுழைந்து அபகரிக்க முயற்சிக்கதாகவும். தாங்கள் தடுத்த போது எங்களை தாக்க முற்பட்டனர் என தெரிவித்து துணைத் தலைவர் சூர்யா தனபாலை கண்டித்து பெட்ரோல் கேனுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.
Comments
Post a Comment