திருப்பத்தூர் அருகே காத்தோட்டமாக ஒதுங்கிய நபரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் ஓட்டுநர்! கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்து
திருப்பத்தூர் அருகே காத்தோட்டமாக ஒதுங்கிய நபரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் ஓட்டுநர்! கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் அங்கிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்தி (33) இவர் தன்னுடைய குடும்பத்தோட
ஜோலையார்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு தன்னுடைய உறவினரை சென்னைக்கு அனுப்ப சென்றார்.
அப்போது உறவினரை ரயில் ஏற்றிவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் பொழுது சுந்தரம்பள்ளி பகுதியில் பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் சாலையின் ஓரம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சக்தி ஓட்டி வந்த கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது மேலும் இருசக்கர வாகனமும் சேதமடைந்தது இதில் காரில் பயணித்த ராசு (32) என்பவர் மட்டும் லேசான காயமடைந்தார்.
மேலும் காரில் பயணித்த குடும்பத்தினர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மேலும் இந்த சம்பவம் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர்.
இந்த சம்பவ குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Comments
Post a Comment