கள்ளக்குறிச்சி சம்பவம் போல் தருமபுரியில் உருவாகுவதற்கு முன்பு தடுத்து நிறுத்துங்கள் - சந்துக்கடைகளை குத்தகை எடுத்த திமுக, விசிக, அதிமுக, பாமக, பாஜக ...!!!!!
கள்ளச்சாராயம், விஷச்சாராயம், எனும் கொடுமையான மது கடந்த 19 - 06 - 2024 அன்று அதே கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் உருவாகி சுமார் 50 பேரை பலி கொண்டுள்ளது, இன்று பல குடும்ப பெண்கள், பல குழந்தைகள் அனாதையாக நிற்கின்றனர் இதற்கு காரணம் யார் என தமிழக அரசின் மீது எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசின் தலையில் மிகப்பெரிய இடி விழத்தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் யார்..? இந்த விஷச்சாராயம் கும்பல் யார்..? பின்புலத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்ற ஆய்வில் தற்போது சி பி சி ஐ டி விசாரணை தொடங்கியுள்ளது அந்த அளவிற்கு இது தமிழகத்தையும் தமிழக அரசையும் உலுக்கிவிட்டது. இந்த விஷச்சாராயம் எப்படி உருவாகிறது என சமூக ஆர்வலர்களிடம் கேட்கும்போது தமிழகத்தில் பல இடங்களில் சந்து கடை வைத்து நடத்தும் கும்பல்கள் அரசு மதுபான கடைகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்து
அவர்களிடம் இருக்கும் அரசு மதுபாட்டில்களை பெற்று சந்துக்கடைகள் வைத்திருக்கும் நபர்கள் தாங்கள் தயாரித்த அதாவது ஊமத்தங்காய் விதைகளை ஊறவைத்து அல்லது அந்த மரத்தின் பட்டைகளை வைத்து சாராயம் காய்ச்சி அரசு மதுபாட்டில்களில் கலப்படம் செய்து விற்கின்றனர்..
இந்த சம்பவம்தான் தருமபுரி மாவட்டத்தில் கொடிகட்டி பறக்கிறது சுமார் 25 வருடத்துக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியான கள்ளச்சாராய வியாபாரம் நடைபெற்றது காலப்போக்கில் மனித உணர்வுகளையும் வாழ்க்கையையும் உணர்ந்த காவல்துறையும், மாவட்ட ஆட்சியர்களின் நடவடிக்கையால் அது குறைந்து கொண்டே இருந்தது ஆனால் அது மீண்டும் உயிர் பெற்று பாலக்கோடு, பென்னாகரம். பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டஹள்ளி, அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, போன்ற மலையோர கிராம பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கின்றனர்,
இதில் திமுக, விசிக, அதிமுக, பாமக, போன்ற கட்சிகளை சார்ந்த ஒரு சில அடிமட்ட பொறுப்பாளர்கள் அரசியல் ஆதிக்கத்தை பயன்படுத்தி சந்துக்கடைகளை நடத்தி வருகின்றனர், இது போன்ற செயல்கள் ஒரு சில காவல் அதிகாரிகளின் துணையோடு நடைபெறுவதை நினைத்தால்தான் வெட்கக்கேடாக இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஊமத்தங்காய் சாறுவை அதிகநாள் வைத்து பயன்படுத்தினாலே அது விஷமாக மாறும் என மருத்துவ ஆய்வு கூறுகின்றது. ஆனால் அதனை மீறி மதுவில் அதிக போதைக்காக சாராயத்தில் ஊமத்தங்காய் சாறு கலந்ததால் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர். என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதே செயல்பாட்டை தருமபுரியில் உள்ள சந்துக்கடை வியாபாரிகளும் செய்து வருகின்றனர் மேலும் தர்மபுரியில் உள்ள மது பிரியர்கள் அரசு மதுபான கடைகளில் பாட்டில் வாங்கும் பொழுது அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகின்றது ஆனால் சந்து கடை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்யும் பொழுது அந்த பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை
மேலும் ஒட்டப்படாத அந்த அரசு மது பாட்டில்களில் ஊமத்தங்காய் கொதிக்க வைத்து அந்த சாறுவை பாட்டில்களில் கலந்து விற்பதால் இது எந்த கடைகளில் வாங்கப்பட்டது என்ற அடையாளம் கூட இல்லாமல் போய்விடுகிறது மேலும் அந்த பாட்டிலில் இருக்கும் மதுவை பொதுமக்கள் யாராவது குடித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசு மது விற்பனையாளர்களும் தப்பித்து விடுகின்றனர் இங்கே சந்து கடை வைத்து வியாபாரம் செய்பவர்களும் தப்பித்து விடுகின்றனர்.. தற்பொழுது மெத்தனால் போன்ற ஒரு கொடிய விஷத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளனர். தற்பொழுது இந்த மெத்தனால் எங்கிருந்து வரவைக்கப்பட்டது சாராயம் எங்கே காய்ச்சப்பட்டது அப்பகுதியில் யார் யார் உடன் இருந்தனர் என்று முழு ஆய்வில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது அதேபோல தர்மபுரி மாவட்டத்திலும் மலை கிராமம் ஏரியூர் கோட்டப்பட்டி போன்ற பகுதிகளில் சாராயம் ஏதாவது காய்ச்சப்படுகிறதா அல்லது சந்து கடைகளில் ஊமத்தங்காய் கலக்கப்படுகிறதா என தர்மபுரி காவல்துறை மற்றும் மது ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மாவட்ட ஆட்சியரும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்தாலுமே இங்கே கரை வேட்டிகள் கட்டிய ஆதிக்க வர்க்கம் விடுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை என்பதை தமிழக முதல்வர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே தருமபுரி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...
Comments
Post a Comment