15% சதவீதம் கமிசன் - 6.80 லட்சம் நாமம்...!! வெங்கடசமூத்திரத்தில் சிமெண்ட் சாலை மோசடி...!! மக்கள் இரத்தத்தை ஏன் இப்படி குடிக்கிறீங்க..?? வட்டார வளர்ச்சி துறை கண்டுக்காது உளவுத்துறை களை எடுக்குமா...?

15% சதவீதம் கமிசன் - 6.80 லட்சம் நாமம் வெங்கடசமூத்திரத்தில் சிமெண்ட் சாலை மோசடி...வட்டார வளர்ச்சி துறை கண்டுக்காது உளவுத்துறை களை எடுக்குமா...?
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்  நெருங்க நெருங்க எப்படி தேர்தலுக்கு பணத்தை சுரண்டுவது என்று தெரியாமல் சில அரசியல்வாதிகள் தனக்கான பினாமிகளை  வைத்துகொண்டு ஏதோ மக்களுக்கு நன்மையை செய்வது போல ரோடு, போடுவது, பொது பல் நோக்கு கட்டிடம் கட்டுவது, போன்ற டெண்டர்  பணிகளை எடுத்து மோசமான ( தமிழ் சினிமாவில் வரும் காமெடி போல ..எல்லாம் பேட்ச் ஒர்க் ) என்ற பெயரில் மிகவும் மோசமான பணிகளை செய்து வரும் லட்ச கணக்கில் சால்வன்ஸ் சான்றிதழ் வாங்கி கொண்டு கொள்ளையடிக்க அரசியல் கிராதகர்கள் துணையோடு செய்யும் செயலைத்தான் தருமபுரி மாவட்டத்திலும் பார்த்து அதில்  தருமபுரி மாவட்டத்தில் பல இடங்களில்
[1/2, 2:21 PM] Evidenceparvai: 15 சதவீதம் கமிசன் - 6.80 லட்சம் நாமம் வெங்கட சமூத்திரத்தில் சிமெண்ட் சாலை மோசடி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்  நெருங்க நெருங்க எப்படி தேர்தலுக்கு பணத்தை சுரண்டுவது என்று தெரியாமல் சில அரசியல்வாதிகள் தனக்கான பினாமிகளை  வைத்துகொண்டு ஏதோ மக்களுக்கு நன்மையை செய்வது போல ரோடு, போடுவது, பொது பல் நோக்கு கட்டிடம் கட்டுவது, போன்ற டெண்டர்  பணிகளை எடுத்து மோசமான ( தமிழ் சினிமாவில் வரும் காமெடி போல ..எல்லாம் பேட்ச் ஒர்க் ) என்ற பெயரில் மிகவும் மோசமான பணிகளுக்கு  சால்வன்ஸ் சான்றிதழ் வாங்கி கொண்டு கொள்ளையடிக்க அரசியல் கிராதகர்கள் துணையோடு செய்யும் செயலைத்தான் தருமபுரி மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் வருட்தோறும் பார்த்து வருகிறோம். அதற்கு உதாரணமாக   தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மிகப்பெரிய பஞ்சாயத்து நிர்வாகம் என்று பேர் போன வெங்கட சமூத்திரம் ஶ்ரீ மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டு உட்பட்ட தெருவிற்கு 6.80 மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்து வெறும் 4 நாட்களில் சாலை முழுவதும் விரிசல் ஏற்பட்டுவிட்டது. சரியாக தண்ணீர் ஊற்றாமல் அப்படியே பொத்தாம் பொதுவில் சிமெண்ட் சாலை பணிகளை செய்ததால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றச் சாட்டு வைக்கின்றனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த சாலை பணிகளை எடுத்துவர் துறிஞ்சிபட்டி சக்தி என்று கூறுகின்றனர். இவர் ஏன் இப்படி மோசமாக சாலை பணிகளை அமைக்கவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகையில் பில் கொடுக்கும் அரசு ஊழியர்களுக்கு 15% கமிசன் கொடுத்து பல்வேறு பிரச்சனைக்கு பின்னரே இப்படி பணிகளை செய்ய முடிகிறது என்கின்றனர். மிக கொடுமையான சூழ்நிலையில் கூட மக்களுக்கு நேர்மையான முறையில் சேவை செய்து வரும் திமுக ஆட்சியில் இப்படி மக்களுக்கு அடிப்படை வசதிகளில் கூட கமிசின் எடுத்து தின்னும் பொழைக்கும் சம்பந்தபட்ட மகராசர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி
 இப்படி தரமற்ற சிமெண்ட் சாலை பணிகளை செய்தால் அதனை ஆய்வு செய்து சரியான முறையில் இருந்தால் மட்டுமே ஒப்பந்த பணியாளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால் சம்பந்த பட்ட ரெகுலர் BDO, ஸ்கீம் BDO, ஆய்விற்கு செல்லாமல் கமிசன் கிடைச்சா போதும் நான் ஓகே பண்றேன் என்ற நிலையில் இருப்பதால் தான் என்னவோ இப்படி கேவலமான சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது இருக்கும் ரெகுலர் BDO, ஸ்கீம் அப்படி செய்ய மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை
 உள்ளது காரணம் நேர்மையாக பணி செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Comments