கம்பி என்ன வைத்த காவல்துறை??
[11/15, 3:00 PM] Evidenceparvai: தர்மபுரி மாவட்டம் என்றாலே அங்கு சுற்றியுள்ள ஊர் முழுவதும் மலைப்பகுதிகள், காடுகள், சுற்றியுள்ள பகுதியாக இருக்கும். இதனை சாதகமாக பயன்படுத்தி ஒரு சிலர் கஞ்சா செடிகளை வளர்த்து வருகின்றனர். அதற்கு ஆதாரமாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தாசன்பைல் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார் டூவீலர் மெக்கானிக் பெரியசாமி.. இவர் மாந்தோப்பிற்கும், விவசாய பயிர்களுக்கும், நடுவே 10 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதன் தகவல் ரகசியமாக காவல்துறைக்கு தெரிய வரவே ரகசியமாக தாசன் பைல் கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி மாந்தோப்பிற்கு அருகே அமைந்துள்ள 7500 மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து டூவீலர் மெக்கானிக் பெரியசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இதனால் சிறையில் உள்ள கம்பிகளுக்கு மெக்கானிக் ஆகிவிட்டார் பெரியாசாமி என அப்பகுதி மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு வேளை சோற்றுக்காக உழைத்து வாழ்ந்த மனிதர்கள் சமூக விரோதிகளின் ஆசிகளின் பேச்சை கேட்டு சமூகத்தை சீர்கெடுக்கும் பாதையில் சென்று விடுகின்றனர். உழைத்தால் போதும் ஆரோக்கியமும், ஆசியும் உண்டு...!
Comments
Post a Comment