தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் துணை அமைப்பாளர் சார்பில் வெங்கட்டம்பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் துணை அமைப்பாளர் சார்பில் வெங்கட்டம்பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்ரமணி Ex.MLA அவர்கள்  தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் சு.இளையசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் வேம்பு, புங்கன், வாகை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பி.சி.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.கௌதம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர்கள் மாரி, சுகுமார் , மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.சரவணக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை, ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, துணைச் செயலாளர்கள் ரங்கநாதன், ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி மோகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சித்தன், நிர்வாகிகள் பாளை ந.அன்பு, முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments