ஆயுத பூஜைக்கு கொஞ்சம் கூட கல்ல பொறி கொடுக்கல காரு வச்சிருக்காங்களாம் காரு..!! கண்ணாடிய உடைச்சென் பாரு அலேக்கா அரூர் போலீஸ் தூக்கிட்டாங்க

ஆயுத பூஜைக்கு கொஞ்சம் கூட கள்ளபொறி கொடுக்கல காரு வச்சிருக்காங்களாம் காரு..!! 

கண்ணாடிய உடைச்சென் பாரு  அலேக்கா அரூர் போலீஸ் தூக்கிட்டாங்க

அரூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் - கஞ்சா போதையில் உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் மேல் பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை  உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில், சாலையின் ஓரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, ஈச்சர், பிக்கப் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர் உடைத்து சேதப்படுத்தியதால், இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் நகரம் முழுவதும் பரபரப்பு நிலவி வந்தன.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்ததில் சந்தேகத்திற்கு இடமான அந்த மர்ம நபரை அவருடைய வீட்டில் காவல்துறையினர் பிடிக்கப்பட்டனர். விசாரணையில் அரூர் கேகே நகர் சுடுகாடு மேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவருடைய மகன் வேலு என்பவர் எனவும் நள்ளிரவு நேரத்தில் மது பாட்டில் அருந்திவிட்டு கஞ்சா போதையில் சுற்றி திரிந்ததாகவும் சாலையின் ஓரத்தில் இருந்த கார், ஆட்டோ, ஈச்சர், பிக்கப், இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் வேலுவை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் காவல்துறையினர்.
தற்போது இந்த இளைஞர் ஒரு காரின் கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி காட்சி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments