தொட்டம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளி ஆசிரியை தாக்கியதில் யூகேஜி மாணவன் காயம் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தருமபுரி 
அரூர்
பள்ளி ஆசிரியை தாக்கியதில்  யூகேஜி மாணவன்  காயம்  

அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

போலிஸ்
விசாரணை 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எச்.தொட்டம்பட்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை மாணவ மாணவிகள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள் 

அரூர்  பெரியார் நகரை சேர்ந்த அன்பரசன் (வயது 42) என்பவரது மகன் கீர்த்தன் Cவயது 4) யூகேஜி படித்து வருகிறார் 

நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற  சிறுவனை அப்பள்ளியில் ஆசிரிய காக பணியாற்றும் கல்பனா என்பவர் யூகேஜி படிக்கும் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது 

சிறுவனுக்கு
முதுகு பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது 

இது குறித்து அச்சிறுவன் தனது தாயாரிடம் கூறமால் இருந்துள்ளார் 

இன்று காலை பள்ளிக்கு செல்ல சிறுவனை குளிக்கவைக்கும் போது சிறுவனின் முதுகில் காயம் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர் 

இது குறித்து சிறுவனின் தந்தை அன்பரசு அரூர் போலிஸில் புகாரளித்தார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments