ஈரோடு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலுக்கு பிடியாணை பாப்பிரெட்டிப்பட்டி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்..!பரபரப்பில் பாப்பிரெட்டிப்பட்டி

ஈரோடு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலுக்கு பிடியாணை


 பாப்பிரெட்டிப்பட்டி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

பாப்பிரெட்டிப்பட்டி . செப் - 16-


 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து வருபவர் தங்கவேலு


 இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சி சி ஏ என்ற வழக்கில் ஆஜராக வேண்டும் என்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றுவியல் நடுவர் நீதிபதி கடந்த 26/ 6/ 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்


 அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வழக்கு சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது

 இந்த நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26/ 6/ 2023 தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று 16 /10 /2023 அன்று பாப்பிரெட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடியான உத்தரவு பிறப்பித்துள்ளார்


 இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது

Comments