மரண வலையை வீசும் அரூர் to சேலம் நெடுஞ்சாலை பொதுமக்கள் குற்றச்சாட்டு... டெண்டர் விட்டது என்னாச்சி கேள்வி எழுப்பும் மக்கள்...!!!

மரண வலையை வீசும் அரூர் to சேலம் நெடுஞ்சாலை பொதுமக்கள் குற்றச்சாட்டு


 பாப்பிரெட்டிப்பட்டி. செப்,14-

 தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சாலையான அரூர் சேலம் நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து தினமும் விபத்துக்களை சந்திப்பதால் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலையாக இருப்பது அரூர் சேலம் நெடுஞ்சாலை இந்த சாலை என். எச்,179 ஏ ஆகும்

 இந்த சாலை ஆரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ,சென்னை , வேலூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளை சேலத்தோடு இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாக இந்த சாலை உள்ளது

 இதில் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி டூ சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சோதனை சாவடிகள் இருப்பதால், அவற்றில் கட்டணம் கட்டாமல் இருக்க பெங்களூரிலிருந்து வரும் வாகனங்கள் இந்த அரூர் டூ சேலம் நெடுஞ்சாலையை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்

முக்கிய சாலையாக இருக்கும் இந்த நெடுஞ்சாலை தற்போது குண்டும் குழியுமாக மாறி தினமும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் மரணச்சாலையாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவிக்கையில்



 அரூரிலிருந்து சேலம் செல்லும் இந்த நெடுஞ்சாலையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஏனைய தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் பொதுமக்கள், மருத்துவ வசதி, வணிகம், கல்லூரி மற்றும் அன்றாட தேவைக்காகவும் சேலம் செல்லும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்


 சில ஆண்டுகளாகவே பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் வரை நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து ஒரு அடி உயரம் , ஒரு மீட்டர் நீளம் வரை உள்ள குழிகள் மூடப்படாமலும் சீர் செய்யாமலும் இருக்கின்றனர், இதனால் 4 சக்கர வாகனங்களும், கனரக வாகனங்கள் .பேரூந்துகள், இருசக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்


 குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த குழிகளில் விழுந்து பெரும் அளவு விபத்துக்களை சந்தித்து ,கைகால் இழப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றனர்

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறனர்


 எனவே தற்போது மழைக்காலம் என்பதால், குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் , வாகன ஓட்டிகளுக்கு பழுதடைந்த சாலை தெரியாமல் அதிக அளவிலான இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து உயிரிழந்து வருகின்றனர்


 எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுதடைந்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்


 பழுதடைந்து சாலைகளை சீரமைப்பாமல் இருப்பது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் நமது செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது


 நான்கு வழி சாலை திட்டம் ஒதுக்கப்பட்டு பணிகள் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் பணி செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர், விரைந்து ஒப்பந்தப் பணியை செய்ய கேட்டுக் கொள்வோம் என்று கூறினர்


 தற்காலிகமாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பிய போது அதற்கான நடவடிக்கை விரைவில் எடுப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்


 இந்த சாலைகளை தற்காலிக பணிகள் மூலம் சீரமைப்பதன் மூலம் உயிர் இழப்புகளையும், விபத்துகளையும், தடுக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments