ராஜஷ்தான் வியாபாரி மீது பாப்பிரெட்டிப்பட்டியில் தாக்குதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை....அதிரடியில் இறங்கிய தருமபுரி எஸ்.பி.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பல்வேறு சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழகம் சார்பிலும், காவல் துறையினர் சார்பிலும் பாதுகாப்பு கொடுக்க படுகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் பாதுகாப்பு இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்த தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ராஜஸ்தானி பகுதியை சேர்ந்த தர்மி சந்தர், மனைவி காஞ்சனா இவர்கள் 17 வருடமாக பாப்பிரெட்டிப்பட்டியில் காலனி கடை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு காலனி வாங்க சென்ற பாப்பிரெட்டிப்பட்டி செங்கல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் செருப்பு எடுக்க வந்துள்ளனர். போது கடை உரிமையாளரான தர்மி சந்தரை தரைக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மரியாதையாக பேசுங்கள் இல்லையென்றால் செருப்பு கிடையாது என சொல்லி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த இருவர் கடை உரிமையாளர் தர்மி சந்தர் மீது ஆட்களை கூட்டி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வட மாநிலத்தவர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் உயிர் பயத்தில் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட நபர்கள்.கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தருமபுரி எஸ் பி ஜேசுபாதம் உடனடியாக களத்தி இறங்கியுள்ளார். இதனால் பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment