சிகிச்சைக்காக சென்றவரின் தந்தையை அடித்த அரூர் அரசு மருத்துவர் டாக்டர் ராஜகணேஷ்!!! இவரை கண்டு மிரளும் அரசு ஊழியர்கள் பின் புலத்தில் அரசியல் அமைப்பா??? நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் பாதிக்கபட்ட நபர்
தருமபுரி மாட்டத்தில் முக்கியமான சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக அரூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அரூர் பகுதியை சுற்று சுமார் 150 மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அரூர் நகரை சுற்றி 30 தனியார் மருத்துவமனை இருந்தாலும் அரூர் அரசு மருத்துவமனையைத்தான் நம்பி வருகின்றனர். காரணம் அந்த அளவிற்கு சிறப்பாக அரூர் அரசு மருத்துவத் துறையில் உள்ளவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இப்படி இருக்கையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது நிதின்குமாரை அழைத்து கொண்டு இரவு 11-30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் அரூர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவர் ராஜ கணேஷ் அவர்கள் சிறுவன் நிதின்குமார் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார். இது போல முன்னதாகவே இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள், அந்த சமயம் வாக்குவாதம் முற்றியதில் மருத்துவர் ராஜகணேஷ் அவர்கள் நிதின் குமார் தந்தை குமார் அவர்களை சட்டையை பிடித்து அடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கபட்ட குமார் அரசு மருத்துவமனையில் புகார் கொடுத்ததில் தற்போது அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பாதிக்கப்பட்ட நபர் மருத்துவரை அடித்திருந்தால் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசப்பட்டிருக்கும். இந்த சம்பவத்தை மாவட்ட மருத்துவ இயக்குநர் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் கவனத்தில் எடுத்து கொண்டு விசாரணை நடத்தி மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குமார்கூறுகிறார்
Comments
Post a Comment