திமுக ஆளுங்கட்சியின்னு நினைச்சராதிங்க - மாணவர்களுக்கு மிதி வண்டி கொடுக்கும் நிகழ்ச்சியில் முன்னதாகவே திமுக மிதி வண்டி கொடுத்ததால் மிரட்டலடி கொடுத்த அதிமுக எம் எல் ஏ கோவிந்தசாமி


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே உள்ள பொ.துறிஞ்சிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்
இப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு  படிக்கும் 155 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
இதில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ,ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகம் சார்பில் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது 

பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள சில அரசு பள்ளிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கி வந்துள்ளார் 

அப்போது  பொ.துறிஞ்சிப்பட்டியில் நடைபெற்ற 
மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு அவர் காலதாமதமாக வந்தாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் 
திமுகவை சேர்ந்த பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய  குழு தலைவர் உண்ணாமலை , மற்றும் திமுக  நிர்வாகிகள் பலர்  எம்எல்ஏவுக்காக நாங்கள் காத்திருக்க முடியாது எனவும் 

பள்ளி மாணவர்கள் அதிக நேரம் அமர முடியாது என தெரிவித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி நிகழ்ச்சியை முடித்துள்ளனர் 


நிகழ்ச்சி முடிந்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த  பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி நான் தங்களிடம் கூறிய நேரத்திற்கு வந்து விட்டேன் 

ஏன் என்னை புறகணிப்பு செய்து இந்த விழாவை நடத்தினீர்கள்

எனவும் ஆளும் திமுக அரசை கண்டு நீங்கள் இப்படி செய்தீர்களா எனவும் 

திமுக நிர்வாகிகளுக்காக மக்கள் பிரதிநிதி என்னை புறக்கணிப்பு செய்யலாமா என கேட்டு  ஆசிரியர்களிடத்தில்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
 
மேலும் 
திமுக நிர்வாகிகள் தொடங்கிய இந்த விழாவை தான் நடத்த  முடியாது எனவும் தங்களின் ஒத்துழைப்பு மற்றும் தாங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு மிக்க நன்றி என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்

Comments