பாதுகாப்பு கேட்டு அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் காதலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
அரூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி - வீரம்மாள் என்பவருடைய மகள் அனிதா வயது 23 - இவரும் அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் விமலா மகனான அரவிந்தன் வயது 24 இருவரும்  சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண் வீட்டின் தரப்பில் தெரியவர மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த விஷயம் பெண்ணை பெரும் அளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கியதால் மாப்பிள்ளை பார்க்கும் சம்பவத்தை பற்றி தன்னுடைய காதலன் அரவிந்தனிடம் அனிதா கூறியதால் தற்பொழுது இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக அ பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். தற்போது இந்த இந்தச் சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments