இரு தரப்பு பிரச்சனை அவ்ளோதான் இத நியூஸ் போட்டு சமூதாயத்துக்கு நீங்க காட்ட போறதில்ல செய்தி எடுக்க விடாமல் துரத்திய அரூர் dsp புகழேந்தி...! இது நியாமா டிஜிபி சார் ? செய்தியாளர்கள் குமுறல் !!!!!
இரு தரப்பு பிரச்சனை அவ்ளோதான் இத நியூஸ் போட்டு சமூதாயத்துக்கு நீங்க காட்ட போறதில்ல செய்தி எடுக்க விடாமல் துரத்திய அரூர் dsp புகழேந்தி...! இது நியாமா டிஜிபி ஸார் ?
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாரியம்பட்டி, அதிகாரப்பட்டி கிராமத்தில் 25-05-2023 அன்று மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அதிகாரப்பட்டியில் நேற்று அம்மனை அலங்கரித்து வருடம் வருடமாக தேர் இழுத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஆண்டு தேரின் நிலை பழுதடைந்து இருப்பதால் அம்மனை தேரில் வைத்து இழுத்து செல்ல மக்களின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அம்மனை அலங்கரித்து டிராக்டரில் வைத்து ஊர் வலமாக எடுத்து செல்லும்போது இளைஞர்கள் ஆரவாரம் செய்து இசைக்கு ஏற்றார் போல் நடமாடி அம்மனை வரவேற்று கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பக்கத்து ஊரான மாரியம்பட்டி கிராம இளைஞர்களும் இசைகேற்றவாரு பிகில் ஊதிகொண்டு நடனமாடிச் சென்றுள்ளனர். இதனால் அதிகாரப்பட்டி பகுதியை சேர்ந்த சுனிதா, மாரியப்பன் 6 வது வார்டு உறுப்பினரான இவர்கள் மாரியம்பட்டி இளைஞர்களை நீ எதுக்குடா இங்க வந்து பிகிள் ஊதுறிங்க என்று அவர்களை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி 10 மேற்பட்ட நபர்கள் அடித்துள்ளனர் என பாதிக்கபட்ட மாரியம்பட்டி இளைஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிகில் ஊதி ஏன் தொந்தரவு செய்றீங்க என்று கேட்டதற்கு மாரியம்பட்டி இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்துடா என பிரச்சனை செய்தனர் என்று சுனிதா மாரியப்பன் தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 26-05-2023 அன்று காலை சுனிதா மற்றும் அவருடைய கணவன் மாரியப்பன், இரண்டு மகன்கள், சேர்ந்து மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்று மூன்று இளைஞர்களில் ஒரு இளைஞரை கையை மடக்கி பிடித்து செருப்பால் அடித்ததால் இந்த பிரச்சனை தற்போது இரண்டு கிராமத்திற்கு சாதி பிரச்சினையாக உருவாகி விடுமோ என்ற பதட்டம் நிலவியது.
இருதரப்பையும் அழைத்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் யாருக்கும் பாரபட்சமின்றி இரு தரப்பும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணை இரவு 9 மணி வரை நடந்தது. குற்றவாளிகளை கொரோனா பரிசோதனை செய்வதற்காக அழைத்து வெளியே வரும்போது செய்தியாளர்கள் படம் பிடிக்கிறார்கள் நான் வெளியே வர மாட்டேன் என சுனிதாஅடம்பிடித்ததால் Dsp புகழேந்தி அவர்கள் காவல் நிலையத்தில் வெளியே நின்று படம் பிடித்த செய்தியாளர்களை நீங்கள் தேவையில்லாமல் எங்கள தொந்தரவு செய்யாதீங்க வீடியோ எடுக்க கூடாது. இரு தரப்பு பிரச்சனை செய்தி போட்டு இந்த சமூகதாயதுக்கு ஒன்னும் காட்ட போறதில்லை என செய்தி எடுக்க விடாமல் ரோட்டில் இருந்த செய்தியாளர்களை துரத்திய சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த dsp வந்த பின்பு பல்வேறு குற்றங்கள் குறைந்தது. கள்ளச்சாராயம், கல்லதனமாக மாதுபாட்டில் விற்பது போன்ற குற்ற சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது. இப்படி அதிரடியாக தனது பணியை பொறுப்போடு செய்யும் DSP புகழேந்தி அவர்கள் செய்தி எடுக்க வந்த செய்தியாளர்களை நீங்க செய்தி எடுத்து இந்த சமூகத்துக்கு ஒன்னும் காட்ட போறதில்ல என்று துரத்தியது செய்தியாளர்களிடன் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் அவர்களின் பணியை கொச்சப்படுத்தும் வகையிலும் இருக்கிறதோ என்ற வேதனை செய்தியாளர்களிடன் மத்தியில் உருவாகியுள்ளது
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கையில் அதிகாரப்பட்டி நிழற்கூடம் அருகே மாரியம்பட்டி பெயர்பலகை வைத்துள்ளனர். அந்த பெயர் பலகையின் மீது சுனிதா கணவர் மாரியப்பன் என்பவர் பெய்ன்ட் ஊற்றியுள்ளனர். இதனால் அப்போதே அப்பகுதியில்
சலசலப்பு ஏற்பட்டது. இந்த வேலையை செய்தது என்று அ. பள்ளிப்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அவர்களை
அதுமட்டுமின்றி மாரியம்பட்டி பொதுமக்கள், மற்றும் மற்ற ஊர்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் பேருந்து நிழர்கூடம் இல்லாமல் பேருந்துக்காக மலையிலும் வெயிலிலும் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
இப்படி ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் அதிகாரப்பட்டியில் உள்ள பொதுவான சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரண்டு ஊரும் நன்றாக இருக்கும் வேண்டும் என விரும்பினால் எதாவது ஒரு பிரச்சனை இரு கிராமத்தில் உள்ள ஒரு சில சமூக நல்லிணக்கம் இல்லாத நபர்கள் இரு கிராமத்திற்கும் அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிடுகின்றனர் .
ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் தன்னுடைய ஆணவத்தால் பிரச்சனை செய்து இரண்டு ஊர்களுக்கு சாதி கலவரத்தை தூண்டவும் இரண்டு சமூகத்தையும் பிளவு படத்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர் என அதிகாரப்பட்டியில் உள்ள மாற்று சமூகத்தினர் சுனிதா மாரியப்பன் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
Comments
Post a Comment