திருவிழாவில் சாதி கலவரத்தை தூண்டிய ஒரே ஒரு குடும்பம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பதற்றம் ! DSP விசாரணை...
திருவிழாவில் சாதி கலவரத்தை தூண்டிய ஒரே ஒரு குடும்பம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பதற்றம் ! DSP விசாரணை...
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாரியம்பட்டி, அதிகாரப்பட்டி கிராமத்தில் நேற்று மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அதிகாரப்பட்டியில் நேற்று அம்மனை அலங்கரித்து வருடம் வருடமாக தேர் இழுத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஆண்டு தேரின் நிலை பழுதடைந்து இருப்பதால் அம்மனை தேரில் வைத்து இழுத்து செல்ல மக்களின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அம்மனை அலங்கரித்து டிராக்டரில் வைத்து ஊர் வலமாக எடுத்து செல்லும்போது இளைஞர்கள் ஆரவாரம் செய்து இசைக்கு ஏற்றார் போல் நடமாடி அம்மனை வரவேற்று கொண்டாடினர்.
ஜெயா மகன் அருள்
இந்நிகழ்ச்சியில் பக்கத்து ஊரான மாரியம்பட்டி கிராம இளைஞர்களும் இசைகேற்றவாரு பிகில் ஊதிகொண்டு நடனமாடிச் சென்றுள்ளனர். இதனால் அதிகாரப்பட்டி பகுதியை சேர்ந்த சுனிதா, மாரியப்பன் வார்டு உறுப்பினர் இருப்பவர் மாரியம்பட்டி இளைஞர்களை நீ எதுக்குடா இங்க வந்து பிகிள் ஊதுறிங்க என்று அவர்களை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி 10 மேற்பட்ட நபர்கள் அடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை சுனிதா மாற்று அவருடைய கணவன் மாரியப்பன், இரண்டு மகன்கள், சேர்ந்து மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்று மூன்று இளைஞர்களை செருப்பால் அடித்ததால் இந்த பிரச்சனை தற்போது இரண்டு கிராமத்திற்கு சாதி பிரச்சினையாக உருவாகி விடுமோ என்ற பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கையில் அதிகாரப்பட்டி நிழற்கூடம் அருகே மாரியம்பட்டி பெயர்பலகை வைத்துள்ளனர். அந்த பெயர் பலகையின் மீது சுனிதா மாரியப்பன் என்பவர் பெய்ன்ட் ஊற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஜெயா மகன் அருள் என்ற இளைஞர் அதிகாரப்பட்டி பள்ளிக்கூடத்தில் உள்ள அம்பேத்கர் புகைப்படத்தில் செருப்பு வைத்து சிறு நீர் கழித்துள்ளான். இப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இரண்டு ஊர்களுக்கு சாதி கலவரத்தை தூண்டவும் இரண்டு சமூகத்தையும் பிளவு படத்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர் என்பது இந்த திருவிழா அன்று அதிகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்திணறும், மாரியம்பட்டி கிராம மக்களும் கோரிக்கை வைத்து திருவிழா நிகழ்வை தற்போது சோகமான நிகழ்வாக பொதுமக்கள் பதற்றத்தோடு இருந்து வருகின்றனர். இதனால் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெற கூடாது என்பதற்காக அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர்.
Comments
Post a Comment