மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த வட மாநிலத்தவர் நல்லடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சமங்கலம் கிராமத்தில் உள்ள கோழி கடையில் பீகாரை சேர்ந்த 45 வயதுடைய சாபுதின் என்பவர் நான்கு வருடங்களாக வேலை செய்து வந்தார். இவருக்கு அவ்வப்போது வலிப்பு வரும், கடந்த மாதம் வலிப்பு நோயிற்காக மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது விலாசம் சொந்தங்கள் விவரம் எதுவும் தெரியவில்லை. கடந்த வியாழக்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். *கிருஷ்ணகிரி அறம் சிகரம் கோபி* அவர்களின் உதவியால் கந்திகுப்பம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பை தொடர்பு கொண்டு புனித உடலை நல்லடக்கம் செய்ய கேட்டுக் கொண்டனர். *காவலர் கார்த்திக் ஜெயக்குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், அருண் பிரசாத்* ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை *மை தருமபுரி அமரர் சேவை மூலம் 47 புனித உடல்களை நல்லடக்கம்* செய்துள்ளோம். *மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.*
Comments
Post a Comment