பாப்பிரெட்டிப்பட்டி மக்களுக்கு அறிவிப்பு ! எவிடென்ஸ் நிறுவனத்தின் பெயரை சொல்லி பணம் கேட்டால் ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும்

தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது இணையதள வளையத்தில் உங்கள் ஆதரவில்  அசுர வளர்ச்சியை தொட்டு கொண்டிருக்கிறது நமது எவிடென்ஸ் பார்வை. மக்களுக்கும் மற்றும் அரசுக்கும் எதிரான குற்றச்சம்பவங்கள் நடந்தால் நமது நிறுவனம் களத்தில் இறங்கி அதனை உடனடியாக ஆய்வு செய்து உண்மை தன்மையை மக்களுக்கு அரசுக்கும் வெளிப்படுத்துகிறது நமது எவிடென்ஸ் பார்வை. ஆனால் நிறுவனத்தின் பெயரை சொல்லி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் பணம் கேட்டு வருவதாக மக்கள் பேசிவருகின்றனர். இது உண்மையாக இருக்குமாயின் ( குரல் பதிவுடன் அல்லது வீடியோ ) ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என பொதுமக்களிடம் எவிடென்ஸ் பார்வை நிறுவனத்தின் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்.

Comments