தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகமும்பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஆய்வு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில்
 ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகமும்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஆய்வு

 மக்கள் குறைகளை கேட்டனர்

பாப்பிரெட்டிப்பட்டி. பிப்.1 -

தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் ஆய்வு நடைபெற்றது


இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர் 


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்கள் வாழுகின்ற ஊர்களில் அதிகாரிகள் களத்தில் இறங்கி  மக்கள் குறைகளை கேட்கும் திட்டத்தை அறிவித்தார்


 அதன் பேரில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை அதிகாரிகளும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நேரில் களத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டனர்


 இந்த குறை கேட்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டியன் ஏசு பாதம், மாவட்ட வருவாய் அலுவலர் ,மகளிர் திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், பொது சுகாதார இணை இயக்குனர், வேளாண்மை இணை இயக்குனர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர், நீர்வள நிர்வாக பொறியாளர், நகராட்சி மண்டல இணை இயக்குனர் பேரூராட்சி, முதன்மை கல்வி அலுவலர் ,மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்த ஆய்வு மக்கள் குறை கேட்கும் கூட்டங்களில் கலந்து கொண்டனர்


 அதன்படி கடத்தூர் பேரூராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய பகுதிக்குச் சென்ற இக்குழுவினர் சித்தா பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

 அப்போது கடத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்



 அதேபோல கடத்தூர் பேரூந்து நிலையத்தில் புதிய கட்டுமானம் ரூபாய் 50 லட்சம் செலவில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார், புதுரெட்டியூரில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்


 மேலும் சுங்கர ஹள்ளியில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக சுகாதாரமாக வழங்கப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார், மேலும் ரேகட ஹள்ளியில் நடைபெறும் ரூபாய் 10லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் சவுல் குட்டை சீரமைக்கும் பணியை பார்வையிட்டார்,
 அதே பகுதியில் அங்கனவாடி பள்ளியில் குழந்தைகளுக்கு சத்தான உணவு சுகாதாரம் போன்றவை கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்


 மேலும் பொ. மல்லாபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் பள்ளி மாணவ மாணவர்களிடம் உரையாடி அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார், பேரூராட்சியில் உள்ள 1வது வார்டு பகுதியில் நடைபெறும் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கும் பணி ரூபாய் 28 லட்சம் மதிப்பில் நடைபெறுவதையும் பார்வையிட்டார்


 இதே பேரூராட்சியில் உள்ள பண்டார செட்டிப்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணியையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார்


பையர் நத்தம் அருகே உள்ள போதக்காடு ஊராட்சிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி ,உணவு, சுகாதாரம் குறித்தும் விசாரணை மேற்கொண்டார், அதே பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலை செய்யும் பெண்களிடம் உரையாடினார், போதகாடு பகுதியில் மழை அடிவாரப் பகுதியில் ரூபாய் 28 லட்சத்தி 55 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்


மேலும் அதே பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் நடைபெறும் பணியையும் பார்வையிட்டார்


 ஒரு நாள் முழுவதும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது பொதுமக்கள் ஏராளமான அடிப்படைத் தேவைகள், அன்றாட பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவைகள் குறித்து புகார் மனுக்களை அளித்தனர் 

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியருடன் அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், வட்டாட்சியர் வள்ளி, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி ,எஸ், சரவணன் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சாந்தி உடன் இருந்தனர்

Comments