முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கும்பகோணத்தில் இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவு நாளையொட்டி கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான சாக்கோட்டை க. அன்பழகன் தலைமையில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கும்பகோணம் துணை மேயர் சுப.தமிழழகன். மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ, மகேஷ்
Comments
Post a Comment