கும்பகோணத்தில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது #evidenceparvai #Reporter_Magesh

கும்பகோணத்தில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தஞ்சை: ஆகஸ்ட், 9-

கும்பகோணத்தில் வருகின்ற ஆகஸ்ட் 12,ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சி,பி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு வனவிலங்கு மற்றும் வனத்தில் வசிக்கும் யானைகளை பற்றிய முழு விவரத்தையும் அறிவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு இன்று காலை 10 மணி அளவில் செய்யப்பட்டிருந்தது,

 நிகழ்ச்சிக்கு சி,பி வித்யா மந்திர் தலைமை ஆசிரியர் திருமதி,வந்தனா, மற்றும் எம்,எஸ், ஹரி பிரசன்னா தலைமையில் நம் தேசத்தில் உள்ள அனைத்து வனவிலங்குகள் வனத்தில் உள்ள நீர் நிலைகள் வனப்பகுதிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்து பேசப்பட்டது, இந்நிகழ்வில் முன்னதாக சிறப்பு அழைப்பாளர்
 தமிழ்நாடு வனத்துறை ரேஞ்சர் திரு,பொன்னுச்சாமி, கலந்துகொண்டு தன்னுடைய வன அனுபவங்களை மாணவ மாணவிகள் மத்தியில் பகிர்ந்து கொண்டார், மேலும் இந்நிகழ்வில் வன காவலர்கள் சிங்காரவேலு, வெங்கடேஷ், சிறப்பு வன காவலர்கள் சண்முகம், பிரகாஷ், மற்றும் பள்ளி முதன்மை ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்,


செய்தியாளர் அ, மகேஷ்

Comments