கும்பகோணத்தில் அருள்மிகு படை வெட்டி மாரியம்மன் தாய் வீட்டிற்கு அழைத்தல் உற்சவ விழா.! #kumbakonam #padaivetti_amman_temple
கும்பகோணத்தில் அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் தாய் வீட்டிற்கு அழைத்தல் உற்சவ திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது,
வருடத்தில் ஒருமுறை நடைபெறும் நிகழ்வு அருள்மிகு நாகேஸ்வரர் கோவிலுக்குள் இருந்து புறப்பட்டு தாய் வீட்டிற்கு வரும் அம்மனுக்கு தாய் வீட்டார் மூன்று நாள் உற்சவ திருவிழாவாக ஆகஸ்ட் 22, 23, 24, என மூன்று நாட்கள் படைவெட்டி மாரியம்மனுக்கு விசேஷ திருவிழா, சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில்
நாகேஸ்வரர் கோவிலில் இருந்து தாய் வீடான கவரைத்தெருவுக்கு மேளதாளங்கள் முழங்க ரத யாத்திரையாக எழுந்தருளும் ஐதீக மரபு வழி திருவிழா நிகழ்ச்சியானது பொதுமக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது,
ஆண்டுக்கு ஒருமுறை அம்மனை நாகேஸ்வரர் கோவிலுக்குள் இருந்து தாய் வீட்டிற்கு வரவேற்கும் வினோத திருவிழா, கவரை தெரு பஜனை மடத்திலிருந்து மேளதாளத்துடன் திரளான பெண்கள் அணிதிரண்டு தெருமுனையில் வந்து நிற்கும் அம்மனை வரவேற்கும் ஐதீகம் பழங்காலத்தில் இருந்து இந்த தெருமக்களின் மரபு வழியாக உள்ளது, மேலும் இந்த நிகழ்வானது கலியுகத்தில் காண்போரை வியப்படையவும் செய்கிறது,
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆரவாரத்துடன் அம்மனுக்கு பூமாலை சாற்றி மரியாதை செய்து சொந்த மகளை வீட்டிற்கு அழைப்பது போல் பாவணையில் அம்மனை கவரை தெருவுக்கு அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது,
மேலும் தாய் வீட்டிற்கு வருகை புரியும் படைவெட்டி மாரியம்மன் மூன்று நாள் கவரை தெருவில் தங்கி அந்த தெரு மக்கள் படைக்கும் உணவுகளை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அருள் ஆசி வழங்கிவிட்டு திருவிழா முடிந்தவுடன் மீண்டும் நாகேஸ்வரர் கோவிலுக்கு திரும்பி செல்வது வழக்கம் என தெரு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் அ, மகேஷ்
Comments
Post a Comment