கும்பகோணத்தில் சிற்பநிலைய பட்டறையில் இருந்து வெளியேறும் வேதியல் கழிவு புகையால் மக்கள் கடும் அவதி,நடவடிக்கை மேற்கொள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.!

கும்பகோணத்தில் சிற்பநிலைய பட்டறையில் இருந்து வெளியேறும் வேதியல் கழிவு புகையால் மக்கள் கடும் அவதி,நடவடிக்கை மேற்கொள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.!
தஞ்சை: ஆகஸ்ட்,15-
கும்பகோணம் பேட்டை ஆறுமுகத் தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் துர்காம்பிகை சிற்ப நிலைய  தொழிற்சாலை இயங்கி வருகிறது, இந்த தொழிற்சாலையால் மக்கள் கடும் அவதியை சந்தித்துள்ளனர், (தொடர்ந்து)
 கும்பகோணத்தில் பேட்டை ஆறுமுக தெருவில் சட்டத்திற்கு புறம்பாக சில ஆண்டுகளாக இயங்கி வரும் தொழிற்சாலையால்  சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது,

 அதனைத் தொடர்ந்து துர்காம்பிகை சிற்ப நிலைய ரசாயன பட்டறையில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாகவும் சுகாதார சீர்கேடுகளுக்கு வழி வகுக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் தொழிற்சாலையில் அதிக சத்தம் எழுப்பும் வெண்கல உலோக பொருட்களைக் கொண்டு பணிபுரிந்து வருவதாகவும் 
 இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர், 

மேலும்  சிற்ப பட்டறையில்  வெளியேறும் வேதியியல் கழிவுகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் புகை மண்டலமாக வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் உடல் உபாதைகள் ஏற்படுவதோடு அவ்வப்பொழுது மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர், இந்த அபாயகரமான ஆபத்துகளை உணர்ந்து  அப்பகுதியில் பல குடும்பங்கள் இந்த சிற்ப நிலையம் தொழிற்சாலையை அப்புறப்படுத்த கோரி கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேற்கு காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் மனு கொடுத்துள்ளதாக கூறுகின்றனர், இந்த நிலையில் காவல்துறையினர் மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்  மெத்தன போக்கை கையாளுவதாகவும்  அப்பகுதிவாசிகள் கண்ணீர் விட்டு கதறி அழுது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்,மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியர் முன் வருவாரா.? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,  மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்த்து விரைந்து இந்த பகுதியில் பார்வையிட்டு தொழிற்சாலையை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கண்ணீர் விட்டு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்,


செய்தியாளர் அ, மகேஷ்

Comments