சாலைகள் ஆக்கரிமிப்பு ! நிழர்குடம் இல்லை! பெயர் பலகையில் பெயிண்ட் ! காணாமல் போன அதிகாரப்பட்டி திமுக பஞ்சாயத்து தலைவர் !!!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்பட்டிக்கு பேருந்து, லாரிகள், பள்ளி வேன்கள் செல்வதற்கு போதிய வழித்தடம் இல்லாமல் சிக்கி தவித்து வருகிறது. இந்த மாறியம்பட்டி கிராமம், இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் மக்கள், பட்டியிலன மக்கள், வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த கிராமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில்செங்காட்டுப்புதூர் கிராமம் அமைந்துள்ளது அப்பகுதியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருமகின்றனர். இப்பகுதி மக்கள் 3 கிலோமீட்டர் கடந்து அதிகாரப்பட்டியில் வந்துதான் பேருந்து பயணம் செய்ய முடிகிறது. அதுமட்டுமின்றி இவர்களுக்கு நிழற்குடம் கிடையாது மழை, வெயில் காலத்தில் அருகில் உள்ள கடைகளில் தான் நிற்கவேண்டும்.பஞ்சாயத்து தலைவரிடம் நிழற்குடம் மாற்றி அமைத்து தாருங்கள் என கோரிக்கை வைக்க முயன்றாலும் அதிகாரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் எசொதா ஜெயராமன் இரண்டு ஆண்டு காலமாக காணவில்லை. இதனால் எந்த மனுவும் கொடுக்க முடியும்வில்லை. இவருக்கு பதிலாக எசொதா ஜெயராமனின் கணவர் ஜெயராமன் அவர்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். மக்களுக்கு எந்த ஒரு வசதிகளையும் இதுவரையில் செய்ததில்லை. அதிகாரப்பட்டியில் இருந்து மாரியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலைகள் ஆக்கரிமிப்பு செய்யப்பட்டு ஆற்று நீரோடை பகுதியில் உள்ள நிலங்களை ஆக்கரிமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்திற்கு பேருந்து வசதி கிடைக்காமல் போய்விட்டது. அதிகாரப்பட்டியில் ஒரு சில சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆற்றங்கரை ஓரம் கோவில் கட்டி நிலங்களை ஆக்கரிமிப்புசெய்யப்பட்டுள்ளதால் மாரியம்பட்டி கிராமத்திற்கும், செங்காட்டு புதூருக்கும் வாகனங்கள் செல்ல பெரும் சிரமாமக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி கோவில் விழாக்களில் கெட்டுப்போன உணவுகள், சாப்பிட்ட வாழஇலைகள், தட்டுகள், மாரியம்பட்டி கிராமத்திற்கும் செல்லும் வழியில் போட்டு தீ யிட்டு கொழுத்துவதால் மாணவர்கள், பொதுமக்கள் துற் நாற்றத்தால் பயணம் செய்கின்றனர். மாரியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழி என்று பெயர் பலகை வைக்கப்பட்டது. அந்த பலகையின் மீது சமூக விரோதிகள் பெயிண்ட் ஊத்தி பலகையை நாசம் செய்துள்ளனர். இப்படி மாரியம்பட்டி பல்வேறான இடையூறுகள் சந்தித்து வரும் நிலையில் என்ன ஏது என்று கூட திரும்பி பார்க்காமல் இருக்கிறார் திமுக கட்சியில் ஆதரவில் வெற்றி பெற்ற எசொதா ஜெயராமன். சரி இவர்தான் கண்டு கொள்ளவில்லை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம சாலைபுரம் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு சாதிய தீண்டாமை போல் உளவியல் பார்வையில் தெரிய வருகிறது. இதனால் இரண்டு ஆண்டுகள் காணாமல் போன பஞ்சாயத்து தலைவர் மீது மாவட்ட ஆட்சியர், மற்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரப்பட்டி, மக்களும், மாரியம்பட்டி கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment