தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் காவலர் நல உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் புதிதாக மேதுவடை, தொசை, போன்ற பலவிதமான வித்தியாசமான உணவு வகைகள் வழங்கப்படுவதாக பலகையில் எழுதப்பட்டதால் அதிக கூட்டங்கள் நிரம்பி வழிந்தின. எதற்காக இவ்வளவு கூட்டம் இந்த உணவகத்தின் வாசலில் நிற்கின்றது என்று பலர் கேள்வி எழுப்பும்போதுதான் அட என்னப்பா மெதுவடை ன்னு எழுதுவதற்கு மேதுவடைன்னு எழுதிருக்காங்க இதனால சின்ன பிள்ளைங்க தமிழை போய் இவ்வளவு கேவலமா எழுதிருக்காங்களே இது தாம்ல தமிழ் வளர்ச்சின்னு கிண்டல் அடிச்சிட்டு போயிருக்காங்க ப்பா... மாணவர்களுக்கு தெரிந்த அளவிற்கு கூட உணவகம் நடத்தும் நிர்வாகம் மொழி அடையாளத்தை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு சரியான கல்வி அறிவு இல்லையா இல்லை தமிழின் மீது பற்று இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
Comments
Post a Comment