பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் புஷ்பராஜ் ஆதரவில் சாக்கடையில் இறங்கிய மின் கம்பம் !


நெடுஞ்சாலை துறைக்கும் மின்வாரிய துறைக்கும் மூளைக்கு சார்ஜ்  இல்ல அதனால மின் கம்பம் சாக்கடைக்குள்ள 

தருமபுரி அடுத்த பொ. மல்லாபுரம் பெருந்துநிலையம் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த  டிரான்ஸ்பார்மர்  கம்பத்தை மாற்ற தனிநபர் ஆதிக்கத்திற்கு  முட்டுகொடுத்த பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவியின் கணவர் புஷ்பராஜ், அவர்கள்  ஜப்பானிடம் ஐடியா வாங்கினாரா?
 இல்ல சைனாவிடம் ஐடியா வாங்கினாரா ?
இல்ல முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் ஐடியா வாங்கினாரா?
 என்று இந்த சம்பவம் யோசிக்க வைக்கிறது.

நெடுஞ்சாலை துறைக்கும் மின்வாரிய துறைக்கும் வைக்க மூலையில்ல  அதனால இபி கம்பம் சாக்கடைக்குள்ள 

தருமபுரி அடுத்த பொ. மல்லாபுரம் பெருந்துநிலையம் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த  டிரான்ஸ்பார்மர்  கம்பத்தை மாற்ற தனிநபர் ஆதிக்கத்திற்கு  முட்டுகொடுத்த பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவியின் கணவர் புஷ்பராஜ் ஜப்பானிடம் ஐடியா வாங்கினாரா இல்ல சைனாவிடம் ஐடியா வாங்கினாரா இல்ல முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் ஐடியா வாங்கினாரா என்று இந்த சம்பவம் யோசிக்க வைக்கிறது.

பொ. மல்லாபுரம் பெருந்துநிலையத்தில் அருகாமையில் நல்லத்தம்பி என்பவரின் சுற்றுச்சுவருக்கு இடையூறாக டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் இருப்பதாக லட்ச கணக்கில் செலவு செய்து அரசு நிலத்தில் உள்ள மின் கம்பத்தை அருகில் உள்ள சந்தை கூடும் சாலையில் மாற்ற திட்டம் தீட்டியுள்யுள்ளார் நல்லதம்பி. 

இந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்றி வைத்தால் எதிர்காலத்தில் வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் , பெரும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும், அதுமட்டுமின்றி பொம்மிடி ரயில் நிலையங்கள் அருகே ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றால் மாற்று பாதையாக சந்தை கூடும் சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சாலை ஓரம் டிரான்ஸ்பார்மர் கம்பத்தை வைக்க முயல்வதை விட்டுவிட்டு மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாத இடத்தில் வைக்க வேண்டும் என கூறி 

 அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மேம்பாலமாக இயங்கிவரும்  பேரூராட்சி தலைவரின் கணவர் புஷ்பராஜ் தங்களின் சமூதாய நபர்களை வைத்து எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டதாக  கூறப்படுகிறது. இதுமட்டுமா திரௌபதி படத்தை திரையரங்கில் வெளியிட கூடாது என பெரும் சர்ச்சையை கிளப்பினாராம், கடந்த 1 வருடத்திற்கு முன்பு பிரியாணி கடையில் சண்டையிட்டாராம், என காவல்நிலைய வட்டாரத்தில் இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

புஷ்பராஜ் மூலமாக மின்வாரியத்தில் உள்ள பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என பலபேர் கமிசன் பெற்றுள்ளனர்  என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து  நடூர் மின்சார வாரிய  பணியாளர்களிடம் இது பற்றி விசாரணை நடத்திய பின்னர்  அவர்கள் கூறும்போது சாக்கடைக்குள் மின் கம்பத்தை வைக்க சொன்னது பேரூராட்சி தலைவரின் கணவர் புஷ்பராஜ் தான் என்று கூறினர். ஏன்னா சாக்கடைக்குள் இந்த மின்சார கம்பத்தை நற்றுக்கிங்க எதிர்காலத்தில மின் கசிவு ஏற்பட்டு இங்கே இருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என கேட்டதற்கு அண்ணே நீங்க பேரூராட்சி அலுவலரிடம் கேட்டுகோங்க என சொல்லிவிட்டார்கள்.

 அலுவலகத்தில் கேட்ட போது நாங்க பார்க்கும் போது சாக்கடைக்குள் கம்பம் நடலையே  இப்போ நீங்க சொன்னத பார்த்தா எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கென்று சிவாஜி கணேசன் நடிப்பை நடிக்க தொடங்கிவிட்டார் பேரூராட்சி அலுவலர். 

தனது பேரூராட்சியில் நடக்கும் எந்த ஒரு தகவலையும் செயலையும் எனக்கெண்ணனும் கிடப்பில் போட்டு பணத்துக்கும் மட்டுமே வேலை பார்க்கும் இவர்களை போன்ற நபர்களுக்கு  செத்து போன செல்போனுக்கு சார்ஜர் போடுவது போல துறை சார்ந்த அதிகாரிகள் சரியான முறையில் சார்ஜ் கொடுத்தால் தனிப்பட்ட நபருக்கு ஆதாயத்தை தெடிகொடுக்கும் எண்ணம் வராது என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது .

 அதுமட்டுமின்றி பேரூராட்சி தலைவரின் கணவர் புஷ்பராஜ் அரசுக்கு எதிராக இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதால் திமுக ஆட்சியின் மீது பெருமளவில் வெறுப்புணர்ச்சியை  ஏற்படுத்துவதாக திமுக கட்சி தொண்டர்கள் புலம்பிவிட்டு இப்படி மின் கம்பத்தை சாக்கடையில் பத்தித்து சென்றவர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்க பரிந்துரை செய்யுங்கள் இல்லையென்றால் இந்த ஊரு மானமே போய் விடும் என்று கொந்தளிப்பில் இருக்கின்றனர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தபட்ட புஷ்பராஜிடம் கேட்கும்போது நான் மின் கம்பத்தை சாக்கடையில் நடவே சொல்லல,  அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, என்று படையப்பா படத்தில் ரஜினி செந்தில் காமெடி போல கம்பம் நட சொல்லல ஆனா கூட இருந்தது நான்தானும் அழைப்பை துண்டித்தார் புஷ்பராஜ் .

                                                             🔴கடத்தூர் செய்தியாளர் சிவா🔴👁️‍🗨️🔴

Comments